ஆப்நகரம்

பாரதி கண்ணம்மா சீரியலில் பிக் பாஸ் ஆரி.. அனைவருக்கும் கொடுத்த அட்வைஸ்

பிக் பாஸ் ஆரி பாரதி கண்ணம்மா சீரியலில் பங்கேற்று இருக்கிறார். அங்கு அவர் பெண்கள், கூட்டு குடும்பம் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

Samayam Tamil 3 Apr 2021, 11:33 am
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மெகா சங்கமம் என்கிற பெயரில் ஒன்றாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த இரண்டு சீரியல்களின் குடும்பத்தினரும் 'சூப்பர் குடும்பம்' என்ற ஷோவில் பங்கேற்பது போலவும் அதில் அவர்களுக்கு வில்லிகளால் பல்வேறு பிரச்சனைகள் வருவது போலவும் காட்டப்பட்டு வந்தது.
Samayam Tamil Aari


இந்த போட்டியின் இறுதி போட்டி நேற்று ஒளிபரப்பப்பட்டது அதில் பிக் பாஸ் 4 டைட்டில் வின்னர் ஆரி தான் வெற்றியாளரை அறிவிக்கிறார். ராஜா ராணி 2 குடும்பம் தான் வெற்றிபெற்றதாக அவர் அறிவிக்கிறார். அதற்கு பிறகு பேசிய ஆரி பெண்கள், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

"வெற்றி, தோல்வியை நாம் எப்போதும் கடந்து போய்க்கொண்டே தான் இருப்போம். ஆனால் தோல்வி என்பது முடிவல்ல, அதே போல வெற்றி என்பது தலைக்கு ஏறாமல் பணிவோடு இருக்க வேண்டும். நான் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபோது என்னிடம் கேட்டார்கள் 'இந்த வெற்றி எப்படி இருக்கிறது?' என கேட்டார்கள். நான் வாங்கிய கப்பை வீட்டில் வைத்துவிட்டேன். எனக்கு கொடுத்த அன்பையும், எனக்கு வாக்களித்த மக்களையும், அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் தான் என் சந்தோசம்."

"தற்போது கூட்டு குடும்பத்தில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாக பார்கிறார்கள். நான் வெளியில் போகும்போது கேட்கிறார்கள். எப்படி இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் பொறுமையாக இருந்தீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் அம்மா, பாட்டி, மனைவி என ஒவ்வொரு பெண்களும் மிகவும் பொறுமையாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஆண்கள் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும்."

"கூட்டு குடும்பத்தில் இருந்தால் தான் சகிப்பு தன்மையை கற்றுக்கொள்ள முடியும்" என ஆரி மேடையில் பேசி இருக்கிறார்.

மேலும் பிக் பாஸுக்க பிறகு தான் பங்கேற்கும் முதல் மேடை இது என கூறி இருக்கிறார்.

அடுத்த செய்தி