ஆப்நகரம்

பிக் பாஸ் ஜூலியை மேடையில் அசிங்கப்படுத்திய பெண்! கடும் கோபத்துடன் குத்திய ஜூலி

தன்னை மேடையில் அசிங்கப்படுத்திய பெண் பற்றி பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் கூறி இருக்கிறார் ஜூலி.

Samayam Tamil 16 Aug 2021, 12:14 pm

ஹைலைட்ஸ்:

  • ஜூலி அழகி போட்டி நடுவராக பங்கேற்ற நிலையில் அவர் crown அணிவிக்க கூடாது என மேடையில் சொன்ன பெண்.
  • மேடையில் அனைவர் முன்பும் அசிங்கப்பட்ட ஜூலி இது பற்றி பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் பங்கேற்று இருக்கிறார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Bigg Boss Julie
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜூலி. அதற்கு முன்பு அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அவர் மெரினாவில் கோஷம் எழுப்பிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலானது. அதற்கு பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்ற அவர் இருந்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.
அவரை மிகவும் மோசமாக ட்ரோல் செய்தார்கள் நெட்டிசன்கள். இத்தனை வருடங்கள் கழித்து தற்போதும் அவரை பற்றிய ட்ரோல்கள் நின்றபாடில்லை.

தற்போது ஜூலி விஜய் டீ யின் பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் சென்ட்ராயனுக்கு ஜோடியாக ஆடிவருகிறார். நேற்று ஒளிபரப்பான பிபி ஜோடிகள் ஷோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு யார் மீது கோபம் இருக்கிறதோ அதை கூறி அங்கிருக்கும் பாக்சிங் பேக்கை குத்த வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ஜூலி தன்னை மேடையில் அசிங்கப்படுத்திய பெண் பற்றி கூறினார்.

பிக் பாஸுக்கு பிறகு தான் ஒரு அழகி போட்டியில் நடுவராக சென்றதாகவும், அதில் ஒரு பெண்ணுக்கு பெஸ்ட் ஸ்மைல் என்கிற பட்டம் கொடுத்து crown அணிவிக்க சென்ற போது அந்த பெண் 'நீங்கள் எனக்கு crown அணிவிக்க வேண்டாம். அது எனக்கு அசிங்கம்' என சொல்லி ஜூலியை மேடையிலேயே அசிங்கப்படுத்திருக்கிறார்.

அதை பற்றி கூறி ஜூலி பிபி ஜோடிகள் ஷோவில் பாக்சிங் பேக்கை குத்தி இருக்கிறார்.

அடுத்த செய்தி