ஆப்நகரம்

தளபதி 65ல் நடிக்கிறாரா பிக் பாஸ் கவின்? உண்மை இதுதான்

விஜய்யின் தளபதி 65 படத்தில் கவின் முக்கிய ரோலில் நடிக்க போகிறார் என தகவல் பரவிய நிலையில் அது உண்மை இல்லையாம் .

Samayam Tamil 31 Mar 2021, 8:12 pm
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். அதில் பிக் பாஸ் கவினும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என தகவல் பரவியது. அது பற்றிய உண்மை விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
Samayam Tamil bigg boss kavin is not part of thalapathy 65
தளபதி 65ல் நடிக்கிறாரா பிக் பாஸ் கவின்? உண்மை இதுதான்


தளபதி 65

கோலமாவு கோகிலா மற்றும் டாகடர் பட புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

#Thalapathy65 ஹாஷ்டேக் இன்று ட்விட்டரில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.

கவின் நடிக்கிறாரா?

இந்த படத்தில் பிக் பாஸ் கவின் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போகிறார் என தகவல் பரவியது. அவர் தளபதி

65 பூஜையில் பங்கேற்றதால் அந்த செய்தி பரவியது.

ஆனால் அவர் படத்தில் நடக்கவில்லை என விளக்கமளிக்க பட்டுள்ளது. அவர் இதற்குமுன் நெல்சனுக்கு துணை இயக்குனராக டாக்டர் படத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தான் கவின் தளபதி 65 பூஜைக்கு வந்திருக்கிறார்.

லிப்ட் ரிலீசுக்கு காத்திருக்கும் கவின்

கவின் பிக் பாஸுக்கு பிறகு லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் அம்ரிதா ஐயர் நடித்து உள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள அந்த படத்தின் ரிலீசுக்காக தான் கவின் தற்போது காத்திருக்கிறார்.

இந்த படத்தின் முழு கதையும் லிப்ட் உள்ளேயே நடப்பது போல தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு தான் டாக்டர் படத்தில் துணை இயக்குநராக பணியாற்ற தொடங்கினர் கவின்.

பூஜையில் பங்கேற்காத பூஜா ஹெக்டே

தளபதி 65ல் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அவர் வேறு படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பூஜையில் பங்கேற்கவில்லை. அவர் விரைவில் ஷூட்டிங்கில் இனைய இருப்பதாக கூறி உள்ளார்.

தளபதி 65ல் விடிவி கணேஷ் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். அவர் முதல் முறையாக விஜய் படத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி