ஆப்நகரம்

மூளையில் சர்ஜரி செய்து கொண்ட VJ அர்ச்சனாவின் தற்போதைய நிலை! குடும்பத்தினர் சொன்ன தகவல்

பிக் பாஸ் புகழ் அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு அவரது மூளையில் இருந்த ஒரு பிரச்னையை சரி செய்ய அறிவிற் சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் தற்போது எப்படி இருக்கிறார் என அவரது தாங்கள் மற்றும் மகள் ஸாரா ஆகியோர் அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 13 Jul 2021, 2:50 am

ஹைலைட்ஸ்:

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு மூளை அறுவை சிகிச்சை

சர்ஜனி முடிந்து தற்போது நலமுடம் இருப்பதாக தங்கை தெரிவித்து உள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Archana
பிக் பாஸ் அர்ச்சனா அவரது பேச்சு திறமைக்காகவே சின்னத்திரையில் அதிகம் அறியப்படுபவர். சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அவர். ஜீ தமிழில் இருந்த அவர் பிக் பாஸுக்கு பிறகு விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை (10 ஜூலை 2021) அன்று காலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மூலையில் இருக்கும் சிறு ஓட்டையை சரி செய்ய பல மணிநேரம் சர்ஜரி நடக்கிறது என அர்ச்சனாவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி ஆன ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தினார்கள்.

அர்ச்சனாவின் தற்போதைய உடல்நிலை பற்றி குடும்பத்தினர் தான் அப்டேட் கொடுத்து வருகின்றனர். அவருக்கு உடல் எப்படி இருக்கிறது என அர்ச்சனாவின் தங்கை அனுதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

"அர்ச்சனா தற்போது சரியாகிவிட்டார். விரையவில் திரும்பி வந்துவிடுவார்'" என தெரிவித்து உள்ளார் அவர்.

அடுத்த செய்தி