ஆப்நகரம்

கொரோனாவிடம் இருந்து 2வது முறையாக தப்பினேன்.. குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி அஸ்வின் தான் இன்று கொரோனா நெகட்டிவ் ஆகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

Samayam Tamil 7 May 2021, 6:39 am
நடிகர் அஸ்வின் தற்போது ஹீரோவாக சில படங்களில் நடித்து வரும் நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து 2வது முறையாக தப்பி இருப்பதாக கூறி உள்ளார்.
Samayam Tamil cook with comali 2 ashwin escaped the wrath of covid 19 for the second time
கொரோனாவிடம் இருந்து 2வது முறையாக தப்பினேன்.. குக் வித் கோமாளி அஸ்வின்


அஸ்வின்

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அஸ்வின். அவர் பல வருடங்களுக்கு முன் விஜய் டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் அவர் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

பல வருடங்கள் கழித்து குக் வித் கோமாளி மூலமாக அவர் புகழில் உச்சிக்கே சென்று இருக்கிறார். இதன் மூலமாக அவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் கிடைத்திருக்கிறது.

கொரோனா டெஸ்ட் ரிசல்ட்

இந்நிலையில் அஸ்வின் குமார் தனது கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கொரோனா நெகடிவ் என வந்திருப்பதாக கூறி உள்ளார்.

"கடந்த ஆறு மாதங்களில் அதிர்ஷ்டவசமாக கொரோனாவின் பிடியில் இருந்து 2வது முறையாக தப்பி இருக்கிறேன். இன்று டெஸ்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இதை சீரியஸாக எடுத்து கொள்ளுங்கள் என அனைவரையும் வேண்டுகிறேன்" என அஸ்வின் கூறி உள்ளார்.

அஸ்வினின் இன்ஸ்டா பதிவு

அடுத்த செய்தி