ஆப்நகரம்

குக் வித் கோமாளி 2 டைட்டில் ஜெயித்த கனி! பரிசு எத்தனை லட்சம் தெரியுமா?

குக் வித் கோமாளி இரண்டாவது சீஸனின் டைட்டிலை கனி ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 5 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 14 Apr 2021, 11:15 pm
குக் வித் கோமாளி 2ம் சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் அதிகம் இருந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்து விட்டது.
Samayam Tamil cook with comali 2 title winner kani gets 5 lakh rupees
குக் வித் கோமாளி 2 டைட்டில் ஜெயித்த கனி! பரிசு எத்தனை லட்சம் தெரியுமா?



குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே

குக் வித் கோமாளி 2ன் இறுதி போட்டி இன்று ஒளிபரப்பானது. மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா, அஸ்வின் ஆகிய ஐந்து பேர் தான் போட்டியிட்டனர்.

எதிர்பார்த்தது போலவே அனைத்து போட்டியாளர்களும் மிகவும் வித்தியாசமாக சமைத்தனர். மொத்தம் மூன்று சுற்றுகளாக நடைபெற்றது.

டைட்டில் ஜெயித்த கனி

இறுதியில் டைட்டில் ஜெயித்தது யார் என்பதை சிம்பு தான் அறிவித்தார். காரக்குழம்பு கனி தான் டைட்டில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசை பெற்றுக்கொண்டு மிகவும் எமோஷனலாக பேசினார் கனி.

"பேசுவதற்கு வார்த்தையே வரவில்லை. தினுமும் சாம்பார், ரசம், காரக்குழம்பு வைத்துக்கொண்டிருக்கும்,

நாட்டில் இருக்கும் பல ஆயிரம் சாதாரண பெண்களை போல நானும் ஒருவர் தான். அப்படி பட்ட பெண்களுக்கான அங்கீகாரமாக தான் இதை பார்க்கிறேன்.

நான் வீட்டை விட்டு கூட வெளியில் போகாத ஆளு. என்னை அனைவரது மனதிலும் கொண்டு சேர்ந்தது குக் வித் கோமாளி தான்.

பரிசு தொகை

கனிக்கு பரிசு தொகையாக 5 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது. மேலும் அவருடன் கோமாளியாக இருந்த சுனிதாவுக்கு 1 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது.

அது மட்டுமின்றி கனிக்கு ஒரு பிரபல நிறுவனம் 90 ஆயிரம் ரூபாய்க்கு வீடு உபயோக பொருட்களை கிப்ட் ஆக வழங்கி இருக்கிறது.

அதனால் இன்று கனி பரிசு மழையில் நனைத்து இருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

கனியை பாராட்டிய கணவர்

அடுத்த செய்தி