ஆப்நகரம்

பவித்ரா லக்ஷ்மி செம குத்தாட்டம் போட்ட வீடியோ! அவரா இது என கேட்கும் குக் வித் கோமாளி ரசிகர்கள்

குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி தெருவில் இறங்கி செம குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ அதிகம் வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 15 Apr 2021, 1:17 pm
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா லட்சுமிக்கு இப்போது எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். புகழ் உடன் சேர்ந்து அடித்த லூட்டி நல்ல ரெஸ்பான்ஸ் அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
Samayam Tamil Pavithra Lakshmi


தன்னுடைய பெயரை அனைவரும் தெரியும் அளவுக்கு பிரபலமாக்கியது இந்த ஷோதான் என அவரே இதற்கு முன்பு கூறியிருக்கிறார். மேலும் அதற்கு காரணம் புகழ் தான் என்றும் அவர் வெளிப்படையாகவே நன்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் கிராண்ட் ஃபினாலேவில் பவித்ராவும் பங்கேற்றார். இதிலும் அவருக்கு ஜோடியாக புகழ்தான் வந்திருந்தார். ஆனால் பவித்ரா போட்டியில் ஜெயிக்கவில்லை, காரக் குழம்பு கணி தான் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை ஷகிலாவும், மூன்றாம் இடத்தை அஸ்வினும் பிடித்தனர்.

இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி செம குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவில் திருவிழாவில் தான் பவித்ரா லட்சுமி இப்படி ஆட்டம் போட்டு இருக்கிறார்.

அடுத்த செய்தி