ஆப்நகரம்

நாய் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடிய குக் வித் கோமாளி பவித்ரா

குக் வித் கோமாளி பவித்ரா அவரது நாய் கோகோவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 29 Mar 2021, 5:59 pm
குக் வித் கோமாளி 2ம் சீசன் வைல்டு கார்டு ரவுண்டு நடந்து முடிந்து இருக்கிறது. அதில் இது வரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். மதுரை முத்து தொடங்கி ஷகீலா வரை அனைவரும் போட்டியிட்டனர். இது ஓபன் சேலஞ்சு என்பதால் போட்டியாளர்கள் அவர்கள் விருப்பம் போல எது வேண்டுமானால் சமைக்கலாம் என கூறப்பட்டது.
Samayam Tamil Pavithra Dog Coco Birthday Celebration


இறுதியில் வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகீலா ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் இடம் பிடித்த பவித்ராவும் குக் வித் கோமாளி 2 பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பவித்ராவின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவர் பைனலுக்கு முன்னேறியதற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க பவித்ரா தனது நாய்குட்டியின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. Coco என அவர் நாய்க்குட்டி பெயர் சூட்டி இருக்கிறார். நாயின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் அவர்.

புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதோ..

View this post on Instagram A post shared by ADVENTURES OF COCO (@coco_thecuriouslhatese)

அடுத்த செய்தி