ஆப்நகரம்

குக் வித் கோமாளி புகழின் 'வாத்தி கமிங்' வீடியோ - இணையத்தில் படுவைரல்

குக் வித் கோமாளி ஷோவில் காமெடியில் அசத்தி வரும் புகழின் ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அதில் மாஸ்டர் விஜய் போல சோபாவின் படுத்துக்கொண்டு இருக்கிறார் அவர்.

Samayam Tamil 27 Mar 2021, 1:25 am
புகழ் என பெயர் சொன்னாலே சிரிப்பு வரும் அளவுக்கு தனது காமெடியால் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் புகழ். தற்போது குக் வித் கோமாளி 2ல் காமெடியில் கலக்கிவரும் புகழ் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
Samayam Tamil Pugazh


சமீபத்தில் புகழ் விஜய் சேதுபதி உடன் பைக்கில் அமர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் வைரல் ஆனது. அதற்கு பிறகு தான் புகழ் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் என்பது உறுதி ஆனது.

இந்நிலையில் புகழ் மாஸ்டர் பட விஜய் போல சோபாவில் படுத்துகொண்டிருக்க அவரை மற்றவர்கள் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

அந்த வீடியோவின் இறுதியில் புகழ் கீழே விழுந்துவிடுவார், அது தான் ஹலைட்.

அடுத்த செய்தி