ஆப்நகரம்

இணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி சுனிதாவின் நடன வீடியோ

குக் வித் கோமாளி சுனிதா, கர்ப்பமாக இருக்கும் பிரியா மஞ்சுநாத் உடன் அசத்தலாக நடனம் ஆடி இருக்கும் பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 9 Mar 2021, 1:48 pm
விஜய் டிவியில் தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக இருந்து வரும் குக் வித் கோமாளியின் பங்கேற்கும் பிரபலங்கள் பெரிய அளவில் பாப்புலர் ஆகி வருகிறார்கள்.
Samayam Tamil Sunita


குக் வித கோமாளி மூலமாக புகழ், ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார்கள். இந்த ஷோ எவ்வளவு பாப்புலர் என்பதற்கு இதுவே உதாரணம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் சுனிதாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் நடிகை பிரியா மஞ்சுநாத் கர்பமாக இருக்கும் நிலையில் நடனம் ஆடி இருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த வீடியோ தற்போது மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

சுனிதாவின் நடனத்திற்கு ஒரு புறம் பாராட்டு கிடைத்தாலும், கர்பமாக இருக்கும் பிரியா மஞ்சுநாத் நடனம் ஆடி இருப்பதை பற்றி நெட்டிசன்கள் வியந்து பேசி வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Priya Manjunathan (@priyaholic)

அடுத்த செய்தி