ஆப்நகரம்

கனி மட்டுமில்லை இவரும் தான்.. பிக் பாஸ் 5 பேச்சுவார்த்தையில் குக் வித் கோமாளி பிரபலம்

குக் வித் கோமாளி சுனிதா பிக் பாஸ் ஐந்தாவது சீசன் போட்டியாளராக வரப்போகிறார் என செய்தி பரவி வருகிறது.

Samayam Tamil 24 Mar 2021, 6:51 pm
பிக் பாஸ் 5ல் போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா கலந்துகொள்ள பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என கூறப்படுகிறது.
Samayam Tamil cook with comali sunitha in talks to enter bigg boss 5
கனி மட்டுமில்லை இவரும் தான்.. பிக் பாஸ் 5 பேச்சுவார்த்தையில் குக் வித் கோமாளி பிரபலம்


பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5வது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கி இருக்கின்றனர். வழக்கமாக ஷோ தொடங்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முதற்கட்ட பணிகள் தொடங்கப்படுவது வழக்கம் என்பதால், போன வருடத்தை போல இந்த வருடம் பிக் பாஸ் தாமதம் ஆகி விடக் கூடாது என்பதற்காக அனைத்து பணிகளையும் தற்போதே தொடங்கி இருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் தேர்வு

போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போவது யார் யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான்இருக்கிறது. போட்டியாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக பிக் பாஸ் குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

பல முக்கிய பிரபலங்களுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கதவை தட்டி இருப்பதாக தெரிகிறது. குக் வித் கோமாளி கனி, மன்சூர் அலி கான், ராதாரவி உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி சுனிதா

ஏற்கனவே பிக் பாஸ் கனி, பவித்ரா உள்ளிட்ட பலரும் பிக் பாஸ் 5 வீட்டுக்குள் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வரும் சுனிதாவுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜய் டிவி பிரபலங்களுக்கு முக்கியத்துவம்?

கடந்த சீசனை போல இந்த சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகம் பேர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விஜய் டிவி தொகுப்பாளர்களான ஜாக்குலின், பிரியங்கா உள்ளிட்ட பலரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

மேலும் எப்போதும் பிக் பாஸ் வீட்டில் ஒரு பாடகர் போட்டியாளராக இடம்பெறுவார். இந்த முறை அந்தோணி தாசன் தான் அந்த பாடகர் என்று கூட செய்தி பரவி வருகிறது.

அடுத்த செய்தி