ஆப்நகரம்

குக் வித் கோமாளி 3 எப்போது? வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 23 Nov 2021, 1:22 pm
விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஆன ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. பிக் பாஸுக்கு அடுத்து இந்த தொடருக்கு தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற ஷோ என சொல்லலாம்.
Samayam Tamil cooku with comali 3 to start in december confirmed reports
குக் வித் கோமாளி 3 எப்போது? வெளியான சூப்பர் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்


இரண்டாம் சீசன் கடந்த வருடம் இறுதியில் தொடங்கப்பட்டு தமிழ் புத்தாண்டு வரை ஒளிபரப்பானது. அதே போல இந்த வருடமும் டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் குக் வித் கோமாளி 3 ஒளிபரப்பாக தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் குக் வித் கோமாளி 3ல் யாரெல்லாம் போட்டியாளராக வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

அது மட்டுமின்றி புகழ் சினிமாவில் பிசி ஆகி விட்டதால் அவர் குக் வித் கோமாளி 3ம் சீசனில் பங்கேற்பது சந்தேகம் தான் என தெரிகிறது. அவர் இல்லை என்றால் எதிர்பார்த்த அளவு என்டர்டைன்மெண்ட் இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வழக்கம்போல செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் தான் நடுவராக வர இருக்கிறார்கள். ஆனால் தொகுப்பாளராக ரக்ஷன் மட்டுமின்றி மேலும் ஒருவர் வரலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி