ஆப்நகரம்

டான்ஸ் ஜோடி டான்ஸ் டைட்டில் வின்னர் ரூ.5 லட்சம் கைப்பற்றிய தர்ஷன் – நௌஃபல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில், தர்ஷன் மற்றும் நௌஃபல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 May 2019, 3:25 pm
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில், தர்ஷன் மற்றும் நௌஃபல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Dance


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் ரியாலிட்டி ஷோவின் கிரேண்ட் ஃபினாலே நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு சினேகா, சுதா சந்திரன் மற்றும் லைலா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர். இதில், சந்தோஷ் - தனுஷ், தர்ஷன் - நௌஃபல், அர்மன் - ரோஹன், ஸ்ரீசுமந்த் - ரக்‌ஷித், ராஜேஷ் - தீரஜ் ஆகிய 5 ஜோடிகள் இறுதிப் போட்டி வரை சென்றனர். இந்த நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் விஜி சந்திரசேகர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில், ஒவ்வோரு ஜோடியும், கிளாஸ் ரவுண்ட் மற்றும் மாஸ் ரவுண்டு என்று 2 சுற்றுகளுக்கு நடனம் ஆட வேண்டும். அனைவரும், தங்களது திறமையை வெளிப்படுத்த இறுதியில், தர்ஷன் – நௌஃபல் ஜோடி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த சந்தோஷ் – தனுஷ் ஜோடிக்கு ரூ.3 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இவர்களைத் தொடர்ந்து 3ஆவது இடம் பிடித்த ராஜேஷ் மற்றும் தீரஜ்ஜிற்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆவது இடம் பிடித்த ஸ்ரீசுமந்த் மற்றும் ரக்‌ஷித்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், தனது திறமையை வெளிப்படுத்திய ஜனனிக்கு அவரது எதிர்காலத்திற்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த செய்தி