ஆப்நகரம்

ராதையாக மாறிய டிடி! பசலை நோய்.. யாரை பிரிந்த ஏக்கம் இது? - வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவி டிடி ராதை போன்று உடை அணிந்து எடுத்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Samayam Tamil 26 Mar 2021, 9:18 pm
ராதை சீரிஸ் என்ற பெயரில் டிடி வெளியிட்டு இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
Samayam Tamil dhivyadharshini aka dd latest radha series photos impresses fans
ராதையாக மாறிய டிடி! பசலை நோய்.. யாரை பிரிந்த ஏக்கம் இது? - வைரலாகும் புகைப்படங்கள்



டிடி

சின்னத்திரையில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் அவரை 2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை டிடி போட்டு வருகிறார்.

ராதை கெட்டப்பில் டிடி

அந்த வரிசையில் சமீபத்தில் அவர் ராதை போன்ற கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை அதிகம் பாராட்டினார்கள். அதில் அவர் மிக அழகாக இருப்பதாக கூறினார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் போட்டு இருந்த டிடி இன்று மேலும் ஐந்தாறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்து சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

வாழ்த்தும் பிரபலங்கள்

நடிகை வாணி போஜன் இரண்டு ஹார்டின்களை கமெண்டில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த டிடி 'வாணிமா நாம் ஒன்றாக ஒரு ஷுட் செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் பிக் பாஸ் அர்ச்சனா

'Oh you pretty thing!' என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் கேபி "What is this beauty 😍"என கமெண்ட் செய்திருக்கிறார். இப்படி பல பிரபலங்கள் டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்துவிட்டு வியந்து பாராட்டி வருகிறார்கள்.

பசலை நோய்

மேலும் டிடி தற்போது ராதை பசலை நோய் உடன் இருப்பது போன்று இருக்கும் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சங்ககால இலக்கியத்தில் பசலை நோய் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்.

'அன்பான ஒருவரின் பிரிவால் வரும் வலி தான் பசலை நோய்' என டிடி குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் அவர் செம அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இருப்பினும் ஒரு சிலர் யாரை நினைத்து வந்தது இந்த பசலை நோய் என நக்கலாக கமெண்டில் கேட்டு வருகிறார்கள்

போட்டோ

View this post on Instagram A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)

அடுத்த செய்தி