ஆப்நகரம்

கடவுளின் விளையாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை - விஜே அர்ச்சனா இரங்கல்

டாக்டர் சேதுராமன் இறப்பு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார் தொகுப்பாளர் அர்ச்சனா.

Samayam Tamil 27 Mar 2020, 11:24 am
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்திருந்த டாக்டர். சேதுராமன் நேற்று இரவு அகால மரணமடைந்தார். இந்த செய்தி அறிந்த டிவி பிரபலங்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுப்பாளர் அர்ச்சனாவும் தனது இரங்கலை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vj archana


View this post on Instagram A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on Mar 26, 2020 at 8:53pm PDT

மூன்று மாதங்களுக்கு முன் அவரது கையால் விருது வாங்க நேர்ந்தது. எனக்கு முன்பாகவே மேடையில் வந்து விட்டார் அவர். மிக எளிமையாக, புன்னகையுடன் வெகு நேரம் காத்திருந்தவர், அதே மகிழ்ச்சியுடன் எனக்கு விருதை அளித்தார். சில சமயங்களில் கடவுளின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரின் குடும்பத்தாருக்கும் அந்த சிறு பெண் குழந்தைக்கும் தாங்கமுடியாத இவரின் இறப்பை எதிர்கொள்ளும் திறனை கடவுள் அளிக்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் இப்படித்தான் சோதித்துக் கொண்டிருக்கிறார், தாங்க முடியாத இழப்பு, இரங்கல்கள் என பலரும் இந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். காலையிலேயே ஒரு கஷ்டமான செய்தி. நம்பமுடியவில்லை எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி