ஆப்நகரம்

என்ஜாய் எஞ்சாமி.. குக் விதி கோமாளி 2 பைனலுக்கு வந்திருக்கும் பிரபலம்! வைரலாகும் போட்டோ

குக் இது கோமாளி 2ம் சீஸனின் இறுதி போட்டியில் விருந்தினராக என்ஜாய் எஞ்சாமி பாடகி தீ கலந்துகொண்டிருக்கிறார். அதன் புகைப்படம் வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 10 Apr 2021, 12:16 am
விஜய் டிவியில் தற்போது ஹாட் ட்ரெண்டிங் நிகழ்ச்சியாக இருந்து வருவது குக் வித் கோமாளி தான். இரண்டாம் சீசன் இறுதிப்போட்டி வரும் புதன் கிழமை தமிழ் புத்தாண்டுக்காக ஒளிபரப்பாக உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி மதியம் 2 மணிக்கு குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாக உள்ளதை அதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Samayam Tamil Dhee in Cooku with Comali 2 Grand finale


மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டியில் மோதுகின்றனர். அதில் ஜெயிக்கப்போவது யார் என்ற டஎதிர்பார்ப்பும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. மேலும் சிறப்பு விருந்தினராக சிம்பு குக் வித் கோமாளிக்கு வந்திருப்பதும் பெரிய ஹைலைட். அவர் அஸ்வினுக்கு பரிசளிக்கும் போது எடுத்த புகைப்படமும் இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தது.

தற்போது மேலும் ஒரு முக்கிய பிரபலமும் குக் வித் கோமாளியில் கலந்துகொண்டிருக்கிறார். தற்போது இணையத்தில் பல சாதனைகள் படைத்தது வரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாடகி தீ தான் CWCக்கு வந்திருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி உள்ளன.

View this post on Instagram A post shared by Vijay Television (@vijaytelevision)

View this post on Instagram A post shared by Vijay Television (@vijaytelevision)

View this post on Instagram A post shared by Vijay Television (@vijaytelevision)

அடுத்த செய்தி