ஆப்நகரம்

மைனா நந்தினியிடம் 'அந்த' ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்

டிவி நடிகையான மைனா நந்தினியிடம் இருந்து ரகசியம் ஒன்றை அதுவும் உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார்கள் ரசிகர்கள்.

Samayam Tamil 1 Jun 2020, 5:33 pm
சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நந்தினி. அந்த மைனா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அதனால் அவர்கள் நந்தினியை மைனா என்றும் மைனா நந்தினி என்றும் அன்புடன் அழைக்கிறார்கள்.
Samayam Tamil myna nandhini


மைனா நந்தினியின் முதல் திருமணம் சோகத்தில் முடிந்தது. இதையடுத்து அவர் டிவி நடிகரான யோகேஸ்வரனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த திருமணமாவது கடைசி வரை நிலைக்க வேண்டும். மைனா நந்தினி ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டார் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் யோகேஸ்வரன் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் மைனா நந்தினியின் பிறந்தநாளுக்கு யோகேஸ்வரன் சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியின்போது எடுத்த வீடியோவை நந்தினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். வீடியோவில் நந்தினியின் வயிறு பெரிதாக இருந்ததை பார்த்த ரசிகர்கள் என்னக்கா, கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டனர். இதையடுத்து தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மைனா நந்தினி அறிவித்தார்.

நந்தினியை யோகேஸ்வரன் நல்லபடியாக பார்த்துக் கொள்வதை பார்த்து நிம்மதி அடைந்த ரசிகர்கள் கர்ப்ப விஷயம் பற்றி தெரிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மைனா நந்தினி அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அவர் புடவை அணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அக்கா எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். மாநிறமாக இருந்த நீங்கள் நாளுக்கு நாள் வெள்ளையாகிக் கொண்டே போகிறீர்கள். அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தால் நாங்களும் கலராவோம்ல என்று தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram Thank you soo much lovely saree from @shri_sai_collections_ A post shared by Nandhini Myna (@myna_nandhu) on May 30, 2020 at 11:29pm PDT
சின்னத்திரை ஷூட்டிங்கை மீண்டும் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. செட்டில் 60 பேர் இருக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தனை நாட்களாக வீட்டில் இருந்த நந்தினி மீண்டும் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதுவும் கொரோனா வைரஸ் சென்னையில் பேயாட்டம் ஆடும்போது நீங்கள் எப்படி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியும். அப்படியே கலந்து கொண்டாலும் பார்த்து பத்திரமாக இருக்கவும். சென்னையில் யாருக்கு கொரோனா இருக்கு, யாருக்கு இல்லை என்பதே தெரியவில்லை. நேற்று வேறு காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டை அடுத்து காசிமேடு மார்க்கெட்டாலும் கொரோனா அடுத்து ஒரு ரவுண்டு வருமோ என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நீங்கள் கண்டிப்பாக ஷூட்டிங்கில் கலந்து கொள்ளத் தான் வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மைனா நந்தினி மீது பாசம் அதிகம் உள்ள ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தான் நந்தினி மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்பது பற்றி கவலையில் உள்ளனர். அதே சமயம் மைனா தாயாகப் போவதால் சந்தோஷத்திலும் இருக்கிறார்கள். அண்மையில் தான் டிவி நடிகையான ஆல்யா மானசா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் இன்னும் 5 மாதங்களில் மைனா வீட்டிலும் ஒரு குழந்தை இருக்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி