ஆப்நகரம்

ஹீரோயினாக ஒப்பந்தமான சுந்தரி சீரியல் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா?

சுந்தரி சீரியல் கேப்ரியல்லா தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் கனா காணும் காலங்கள் பிரபலம் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Samayam Tamil 9 May 2021, 3:46 am
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கேப்ரியல்லா செல்லஸ். அவர் இதற்குமுன்பே நயன்தாராவின் ஐரா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் தற்போது நடித்துவரும் சுந்தரி சீரியலில் கருப்பாக இருப்பதால் இவரை ஒதுக்கி வைக்கும் கணவர், அதனால் இவர் சந்திக்கும் சிக்கல்கள் என கதை ஓடிக்கொண்டிருக்கிறது.
Samayam Tamil Gabriella sellus


இந்நிலையில் கேப்ரியல்லா தற்போது ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் என்ற இயக்குனர் இயக்கத்தில் ‘N4’ என்ற படத்தில் தான் கேப்ரியல்லா ஹீரோயினாக நடிக்க உள்ளார். கனா காணும் காலங்கள் புகழ் மைக்கேல் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கேப்ரியல்லாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

N4 படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை கேப்ரியல்லா வெளியிட்டு உள்ளார்.

View this post on Instagram A post shared by Gabriella sellus (@gabrellasellus_official)

அடுத்த செய்தி