ஆப்நகரம்

Parithabangal: பரிதாபங்கள் சானலுக்கு தடையா ?ஒரே ஒரு வீடியோவால் கிளம்பிய சர்ச்சை..!

கோபி மற்றும் சுதாகர் நடத்தி வரும் பரிதாபங்கள் சானலில் இடம்பெற்ற வடக்கு ரயில் வீடியோவால் தான் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறி அந்த சானலை தடை செய்யுமாறு சிலர் வழக்கு தொடுத்துள்ளார்.

Authored byS வினோத்குமார் | Samayam Tamil 7 Mar 2023, 10:19 am
அரசியல் முதல் சினிமாவை வரை பல ஸ்பூப் வீடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மெல்ல மெல்ல தன் பக்கம் இழுத்தனர் கோபி மற்றும் சுதாகர். பின்பு அரசியல் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டதால் சில சர்ச்சைகள் கிளம்ப தனியாக பரிதாபங்கள் என ஒரு சானலை ஆரம்பித்து அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை நகைச்சுவையாக ஸ்பூப் விடியோவாக பதிவிட்டு அதில் சில கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
Samayam Tamil பரிதாபங்கள்



தற்போது இவர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது படத்தயாரிப்பில் கோபி மற்றும் சுதாகர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகின்றது. இவர்களின் வீடியோக்களின் மூலம் தான் தற்போது மீம் கிரியேட்டர்களுக்கு கண்டன்ட் கிடைத்து வருகின்றது என்றே சொல்லலாம்.

Jayam ravi: லோகேஷ் மட்டும் அல்ல..நானும் தான்..உறுதிப்படுத்திய ஜெயம் ரவி..!

இவர்கள் முகங்கள் இல்லாத மீம்களே இல்லை. வடிவேலுவுக்கு பிறகு அதிகமாக கண்டன்ட் கொடுப்பது இவர்கள் தான். இந்நிலையில் இவ்வாறு பல ரசிகர்களை கொண்ட கோபி சுதாகரின் பரிதாபங்கள் சானலை தடை செய்ய வேண்டும் என சிலர் வழக்கு தொடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதற்கு முக்கிய காரணம் அவர்கள் பதிவிட்ட வடக்கு ரயில் பாவங்கள் வீடியோ தான். வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருவதையும், அவர்கள் ரயிலில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்து வருவதையும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர் கோபி மற்றும் சுதாகர்.

பரிதாபங்கள்


இந்த வீடியோ இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்று செம வைரலானது. மேலும் இதைவைத்து பல மீம்ஸ்களும் போடப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் இதற்கு இவர்கள் போட்ட வீடியோ தான் காரணம் என கூறி இவர்கள் சானலை தடை செய்ய ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்த சிலர் வழக்கு போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


மேலும் கட்டுமான பொறியாளர் சங்கத்தை சார்ந்த ஒருவரும் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் செம வைரலான வடக்கு ரயில் பாவங்கள் வீடியோவின் மூலம் கோபி மற்றும் சுதாகருக்கு சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
S வினோத்குமார்
வினோத் குமார். நான் பொறியியல் மற்றும் ஊடகவியல் பட்டப்படிப்பை படித்துள்ளேன்.கடந்த நான்கு ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகினறேன். சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நான் தற்போது times internet சமயம் தமிழில் சினிமா தொடர்பான விஷயங்களை எழுதும் sub editor ஆக பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி