ஆப்நகரம்

லாஸ்லியா இந்த குக் வித் கோமாளி பிரபலத்தை கல்யாணம் பண்ணிக்கணுமா.. இதென்ன புது கிசுகிசு

லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் இருவரையும் பற்றி கிசுகிசு தற்போது பரவி வருகிறது.

Samayam Tamil 26 May 2021, 6:23 am
பிக் பாஸ் மூன்றாம் சீசன் நடைபெற்றபோது அதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களில் லாஸ்லியாவின் பெயர் இடம்பெற்று இருந்தது. அது மட்டுமின்றி அவர் கவின் உடன் காதலில் இருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் ஹீரோயின் ஆன லாஸ்லியா தனது முதல் படமான friendship ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
Samayam Tamil Losliya


லாஸ்லியா கவின் உடனான காதலை முறித்துகொண்டார் என பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது லாஸ்லியா பற்றி புது கிசுகிசு ஒன்று தொடங்கி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் லாஸ்லியா சமீப காலமாக ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்களில் கருத்து பதிவிட்ட ஒருவர் "நீங்க ஏன் குக் வித் கோமாளி அஸ்வினை கல்யாணம் பண்ணிக்க கூடாது" என கேட்டிருக்கிறார், அதற்கு லைக்குகளை குவிந்து வருகிறது. அவர்கள் இதற்கு முன் சோப்பு விளம்பரத்தில் ஜோடியாக நடித்தார்கள். அதில் லாஸ்லியாவும் தாறுமாறு கவர்ச்சி காட்டி இருந்தார்.

ஒரு சோப்பு விளம்பரத்தில் சேர்ந்து நடித்ததற்காக தற்போது திருமணம் வரை செய்ய சொல்கிறார்களே, இந்த நெட்டிசன்கள் ரகளை தாங்க முடியலையே என அனைவருக்கும் நிச்சயம் தோன்றி இருக்கும்.

சினிமா துறையில் கிசுகிசுக்கா பஞ்சம்.. அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் வரவு லாஸ்லியா தான். அவர் இந்த வதந்திக்கு ரியாக்ட் செய்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி