ஆப்நகரம்

பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வருகிறாரா ஷகீலாவின் மகள்?

குக் வித் கோமாளி 2 போட்டியாளர் ஷகீலாவின் மகள் பிக் பாஸ் 5ல் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்கிற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Samayam Tamil 2 Apr 2021, 11:31 am
பிக் பாஸ் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய் டிவியின் பல பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாக வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
Samayam Tamil Shakeela Daughter


உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் எனக்கூறி தற்போது இணையத்தில் ஒரு பெரிய லிஸ்ட் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் நடைபெற்றது போலவே இதுவும் உத்தேச பட்டியல் தான். உண்மையான போட்டியாளர்கள் யார் யார் என்பது நிகழ்ச்சி துவங்கும் நாளில் தான் உறுதியாக தெரிய வரும்.

கடந்த வருடம் நான்காவது சீசனில் ஆரி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் டைட்டிலை ஜெயித்தார். அவர் பத்து கோடிக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது சீசனுக்கான போட்டியாளர்களை உறுதி செய்ய தற்போது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. சினிமா, டிவி, யூடியுப் உள்ளிட்ட தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் நபர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நடிகர் ராதாரவி, மன்சூரலி கான், எம் எஸ் பாஸ்கர், குக் வித் கோமாளி பிரபலங்களான பவித்ரா லக்ஷ்மி, சுனிதா உள்ளிட்டோர் இடமும் பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது பரவும் புதிய தகவல் என்னவென்றால் ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிலா பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. குக்கு வித் கோமாளியில் தான் ஷகிலா தனது திருநங்கை மகளை அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற குக்கு வித் கோமாளி பிரபலங்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் எனவும் பரவும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது உறுதியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி