ஆப்நகரம்

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் மகனா இது? வைரலாகும் போட்டோ பற்றி விளக்கம்

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் மகன் என கூறி ஒரு போட்டோ இணையத்தில் வைரல் ஆனது. அது அவரது சொந்த மகன் இல்லை என தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.

Samayam Tamil 13 Apr 2021, 8:13 pm

ஹைலைட்ஸ்:

  • பாக்கியலட்சுமி சீரியல் கோபி மகன் என குறிப்பிட்டு வைரல் ஆன போட்டோ
  • அது பற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கூறி உள்ளார் சதீஷ்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Baakiyalakshmi serial Sathish
விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். அவர் இன்று இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில் அவர் "No captions. Appa and baby" என குறிப்பிட்டு இருந்ததால் அவர் உடன் இருப்பது அவரது மகன் தான் என ரசிகர்கள் நினைத்தனர். அந்த புகைப்படமும் இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆனது. ஒரு வாரத்திற்கு முன்பு தான் சதிஷ் தனது மனைவியின் போட்டோவை வெளியிட்டு இருந்தார். தற்போது மகன் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் நினைத்தனர்.

இந்நிலையில் இந்த போட்டோ பற்றி சதீஷ் விளக்கம் அளித்து உள்ளார். அது அவரது மகன் இல்லை என தெரிவித்து உள்ளார். "இந்த அழகிய குழந்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்மாவை இழந்துவிட்டான். அதை அவன் என்னிடம் கூறிய போது என் இதயம் நொறுங்கிவிட்டது. அதனால் தான் இனி என்னை அப்பா மற்றும் அம்மா இரண்டுமாக நினைத்துக்கொள் என கூறினேன்.'

'அதனால் தான் போட்டோ கேப்ஷனில் அப்பா மற்றும் பேபி என போட்டேன். அந்த பையனின் வலி என்ன என்பது எனக்கு தெரியும். ஏன்னென்றால் நானும் என் 5 வயதில் என் பெற்றோரை இழந்துவிட்டேன்' என சதிஷ் கூறி உள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சதீஷை பாராட்டி வருகிறார்கள்.

View this post on Instagram A post shared by Sathish (@sathish_artist05)

அடுத்த செய்தி