ஆப்நகரம்

வீட்டுல கவின் என்ன பண்ணிட்டு இருக்கார் பாருங்க!

பிக்பாஸ் கவின் இப்போ வீட்டில் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை பாருங்கள்.

Samayam Tamil 27 Mar 2020, 4:36 pm
கவின் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய நாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கேமராவை பார்க்க, நாய் அவரை பார்க்கிறது. இதை கேப்சனாக குறிப்பிட்டிருக்கிறார் கவின்.
Samayam Tamil kavin


View this post on Instagram A post shared by Kavin M (@kavin.0431) on Mar 26, 2020 at 7:11am PDT

அப்ப... நீ என்ன பாத்தப்போ நா உன்ன பாக்கலனா.. நா உன்ன பாக்றப்போ நீ எங்கயோ பாப்ப.. என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வீடுகளில் முடங்கியுள்ள டிவி பிரபலங்களும், நடிகர், நடிகையர் பலரும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவின் வீட்டில் நாயுடன் விளையாடியபோது எடுக்கப்பட்ட ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, இவரின் இரண்டாவது படமான லிஃப்ட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் அம்ரிதா நடிக்கிறார். லிஃப்ட் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்துவந்த நிலையில்தான், கொரோனா பரவலை தடை செய்ய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் படக்குழுவும் காத்திருக்கிறது.

View this post on Instagram A post shared by Kavin M (@kavin.0431) on Mar 27, 2020 at 3:10am PDT

இந்நிலையில், கவின் உள்ளிட்ட பலர், பிரபல யூடியூப் நிறுவனமான பிளாக் ஷீப்புடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு திட்டங்களை செய்யவுள்ளனர். இதுகுறித்தும் கவின் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

நீங்க பண்றது பெரிய வேல.. இப்போ முக்யமானது, ரொம்ப அவசியமானதும் கூட.. நாங்க ஒரு சின்ன கருவி தான் இதுல.. நல்லதுக்கு கருவியா இருக்குறது என்னைக்குமே பெரிய மகிழ்ச்சி.. என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார் கவின்.

அடுத்த செய்தி