ஆப்நகரம்

அக்கா..! நீங்க போயி ரெஸ்ட் எடுங்க: பாண்டியன் ஸ்டோரில் இன்று!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய தினம் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே விரிவாக காணலாம்.

Samayam Tamil 8 Jan 2021, 2:31 pm
அதிகாலை எழுந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் டீ போட்டு கொடுக்கிறார் முல்லை. முல்லை பொறுப்பாக இருந்ததால் தப்பிச்சோம் என்று மூர்த்தி, கதிரிடம் பேசிக் கொண்டிருக்க, அய்யயோ இவ்ளோ நேரம் தூங்கிவிட்டனே என்று லேட்டாக எழுந்து வருகிறார் தனம். வழக்கம் போல் டீ, காபி இல்லாமல் தனத்திற்கு, முல்லை ஸ்பெஷல்லாக பால் அருந்த கொடுத்தார். மாமாவுக்கு காலை-ல எழுந்ததும் டீ கொடுத்து பழக்கிட்டு நான் மட்டும் எப்படி இத குடிக்கிறது என்று, டீ ரெடி செய்ய கிளம்பும் தனத்திடம், அக்கா..! மாமா, ஜீவா மாமா எல்லாரும் டீ குடிச்சாச்சு. நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்கிறார் முல்லை. பின்னர் கதிர் எங்கே என தனம் கேட்க, அவர் கிளம்பி கடைக்கு போயிட்டார் என கூறிய முல்லையிடம், கடைக்கு போயிட்டானா? அவ்ளோ நேரம் நான் தூங்கிட்டனா?
Samayam Tamil Pandian Stores


கதிர் கிளம்பும் போது என்னைய கேக்கலையா? என்கிட்ட சொல்லாம கிளம்ப மாட்டானே என கேள்வி எழுப்பிய தனத்தை, ஒரு நாள் லேட்டாக எந்திருச்சுட்டு எல்லாதையும் கேள்வி கேட்டு கொன்னுட்டு இருக்கா. அப்டீனு ஜீவாவிடம் கிண்டல் அடிக்கிறார் மூர்த்தி. பின்னர் ஜீவாவின் அம்மா பாப்பாவைப் பற்றியும், மீனாவைப் பற்றியும் கேட்க, பாப்பா தூங்குவதாகவும் மீனா..... அப்டீனு அமைதியான ஜீவா... மீனா பாப்பாவ பார்த்துட்டு இருப்பா என சொல்லி சமாளிக்கிறார். பிறகு பாப்பா துணியெல்லாம் இருக்கும் நான் போயி துவைக்கிறன் என கிளம்பும் தனத்திடம், "அக்கா.! டாக்டர் உங்கள ரெஸ்ட் எடுக்கத் தான சொன்னாங்க",

தேன்மொழி B. A சீரியல் என்ன ஆச்சு.. கைவிடப்பட்டதா? விஜய் டிவி கொடுத்த விளக்கம்

நீங்க கொஞ்சம் நேரம் பேசாம இருக்கிங்களா என மிரட்டலாக சொல்கிறார் முல்லை. பாப்பாவை தூக்கிட்டு வரன்னு கிளம்பிய ஜீவா, அங்கு மீனா தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து, ஏ மீனா.. என்ன குளிச்சுட்டு மறுபடியும் தூங்கிகிட்டு இருக்க, அங்க உன்ன எல்லாரும் கேட்டுட்டு இருங்காங்க. என்ன சொல்றது அப்டீனு கேட்கும் ஜீவாவிடம், கேட்டா தூங்றன்னு சொல்லு என்று அசால்டாக பதில் கூறுகிறார் மீனா. இதையடுத்து, ஏன் தான் இந்த தூக்கம் எனக்கு வருதுன்னு தெரியலியேன்னு புழம்பிக் கொண்டே தன் அம்மாவிற்கு போன் செய்யும் மீனா, போனை அட்டன் செய்ததும், என்ன மீனா இங்க இருக்கிறப்போ 10 மணிக்கு எந்திரிக்கிறவ.

இப்போ 7 மணிக்கே எந்துருச்சுட்டனு மீனாவின் அம்மா கேட்க, நீ கூப்பிட்டதும் நான் வந்துருக்லாம்-மா அப்டீனு சொல்ல அதற்கு ஏதாவது பிரச்சனையா அப்டீனு கேட்கிறார் மீனாவின் தாய். அதற்கு மீனா பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை என்று போனை கட் செய்கிறார். இங்க வந்தா இருக்க முடில, அங்க போனா ஜீவா இல்லாம இருக்க முடில, என்ன வாழ்க்கைடா இது? அப்டீனு புழம்பிக் கொண்டே செல்கிறார் மீனா. இதையடுத்து கதிரும் வீட்டிற்கு வர அனைவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். மீனா வருவதைப் பார்த்த மாமியார் 'ம்ம்.. மகாராணிக்கு விடுஞ்சுருச்சா?' என்று கேள்வி எழுப்ப, குழந்தை தூங்கவே இல்ல.

பாவம் கணேசன் உண்மையிலேயே பாவம் தான்! பாவம் கணேசன் சீரியலில் இன்று

கையெல்லாம் வலி அப்டீனு சொல்ல, ஜீவா கதிரிடம் எப்டி பொய் சொல்றா பாருடா, பாப்பா நல்லா தூங்னா என கூறி மாட்டி விடுகிறார். இதன் பிறகு, சரி நேரம் ஆகுது நான் போயி வேலைய பாக்றன்னு கிளம்பும் தனத்திடம், மறுபடியும் முல்லை, "அக்கா! நீங்க எங்கயும் போக வேண்டாம்", எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன்னு கூறுகிறார். மீனாவையும் உதவிக்கு அழைத்துக்கச் சொல்லும் மாமியாரிடம் மறுபடியும் மீனா இடுப்பு வலினு பொய் சொல்ல, ஓவரா நடிக்காதனு ஜீவா சொல்லி அவர் கிளம்புகிறார். பின்னர் கதிரும், மூர்த்தியும் பாண்டியன் ஸ்டோருக்கு கிளம்பி விட்டனர். பிறகு முல்லை சமைக்க, எப்பவும் போல் மீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, அங்கு வந்த தனத்திடம் அக்கா! எங்க போயிருந்தீங்க என கேட்க, பாரு மீனா பாத்ரூம் போனா கூட எங்க போனீங்க எங்க போனீங்கனு கேக்றா என கூற, 'ம்ம்.. அப்படிதான கேட்பீங்க' என கிண்டல் அடிக்கிருக்கிறார் மீனா.

அடுத்த செய்தி