ஆப்நகரம்

குழந்தை பெயரை அறிவித்த மைனா நந்தினி! வைரல் ஆகும் கியூட் போட்டோக்கள்

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி - யோகேஸ்வர் ஜோடி தங்கள் மகன் பெயரை அழகிய புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்கள்.

Samayam Tamil 12 Nov 2020, 1:14 pm
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் நந்தினி. அந்த சீரியலில் அவர் நடித்த மைனா என்ற கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அது அவரது பெயருடன் இணைந்துவிட்டது. அந்த சீரியலுக்கு பிறகு தான் அவரை மைனா நந்தினி என அனைவரும் அழைக்க துவங்கினார்கள்.
Samayam Tamil Myna Nandhini with son Dhruvan


மைனா நந்தினி சென்ற வருடம் யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. அதற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அதிகம் வாழ்த்துமழை பொழிந்தனர்.

இந்நிலையில் தற்போது பல மாதங்களுக்கு பிறகு மைனா தன்னுடைய குழந்தையின் போட்டோ ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு பெயரையும் அறிவித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனது மகனுக்கு துருவன் என பெயர் வைத்திருப்பதாக மைனா அறிவித்து இருக்கிறார். இந்த போட்டோவுக்கு தற்போது இணையத்தில் அதிக அளவு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.

View this post on Instagram #hey_guys_this_is_my_son #DHRUVAN PC : @kiyoshotz Makeup : @ratnamakeupartist Dress: @baby_propshop Furniture : @mydesignstudioofficial A post shared by Nandhini Myna (@myna_nandhu) on Nov 11, 2020 at 2:34am PST

குழந்தை செம கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள். குழந்தை பிறந்து பல மாதங்களுக்கு பிறகு மைனா வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அடுத்த செய்தி