ஆப்நகரம்

மைனா நந்தினிக்கு கணவர் கொடுத்த காதலர் தின சர்ப்ரைஸ்! எமோஷ்னல் ஆகி கண்ணீர் விட்ட வீடியோ

சீரியல் நடிகை மைனா நந்தியின் கணவர் யோகேஸ்வர் தனது நெஞ்சில் நந்தினி பெயரை பஞ்சை குத்தி இருக்கிறார். அதை பார்த்து மைனா நந்தினி ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார்.

Samayam Tamil 17 Feb 2021, 1:12 am
சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் நந்தினி. அவரது பெயருக்கு முன் மைனா என்ற பெயரும் இணைய அந்த சீரியல் தான் காரணம்.
Samayam Tamil Myna Nandhini


மைனா நந்தினி 2019 நவம்பர் 10ம் தேதி நடிகர் யோகேஸ்வரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அப்போது சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

மைனா நந்தினி - யோகேஸ்வரி ஜோடிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் 5ம் தேதி மைனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துருவன் என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று மைனா நந்தினிக்கு கணவர் யோகேஸ்வர் சில கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கேக், டெட்டி Bear, துருவன் பெயர் இருக்கும் டாலர் என வரிசையாக பல சர்ப்ரைஸ் கொடுத்த பின் இறுதியாக யோகேஸ்வர் தன் நெஞ்சில் நந்தினி என பெயரை பச்சை குத்தி இருக்கிறார்.

அதை நந்தினியிடம் காட்ட அவர் அதிகம் எமோஷனல் ஆனார். அவர்கள் இருவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர் ஆறாக ஓடியது.

நீங்களே இந்த வீடியோவில் பாருங்க..

அடுத்த செய்தி