ஆப்நகரம்

நானும் ரௌடிதான் ; தலைவிரி கோலத்தில் மைனா வெளியிட்ட வீடியோ!

மைனா நந்தினி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 23 Mar 2020, 1:20 pm
சின்னத்திரை நடிகை நந்தினி, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததால் மைனா நந்தினி என்ற பெயரில் புகழடைந்தார். தொடர்ந்து ப்ரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத் தம்பி, அரண்மனைக் கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட தொடர்களில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தனது நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார் நந்தினி. இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil myna nandhini


மைனா வெளியிட்டுள்ள வீடியோ இதோ

View this post on Instagram A post shared by Nandhini Myna (@myna_nandhu) on Mar 22, 2020 at 11:13pm PDT

நானும் ரௌடிதான் எனும் பாடலுக்கு வாயசைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் அவர். அவரின் கண்கள் மிகவும் கலங்கலாக இருப்பதை குறிப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் நீங்கள் ரௌடிதான், நாங்கள் பயந்துட்டோம் என கலாய்த்துள்ளனர்.

வேறு சிலரோ சொல்லித்தான் தெரியவேண்டுமா, நீங்கள் மட்டுமல்ல நானும் ரௌடிதான் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மைனா நந்தினி, சின்னத்திரை மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் நடித்துள்ளார். வம்சம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

அடுத்த செய்தி