ஆப்நகரம்

ஏமா மைனா நந்தினி, நிறைமாத கர்ப்பிணி இப்படி செய்யலாமா?

காட்டுப் பயலே பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.

Samayam Tamil 30 Aug 2020, 4:24 pm
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மைனா நந்தினிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மைனா நந்தினி இன்ஸ்டாகிராமில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். அவர் அவ்வப்போது தன் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
Samayam Tamil myna nandhini


தன் கணவர் யோகேஷ்வரன், நாத்தனார், மாமியார் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோவை மைனா நந்தினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், அம்மாடி மாமியாரே இப்படி சூப்பராக டான்ஸ் ஆடுகிறாரே என்று கூறி வியந்தார்கள்.

மைனா நந்தினி கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வளைகாப்பு நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நந்தினி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நந்தினிக்கு டான்ஸ் ஆடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு ஆட முடியாது அல்லவா.
View this post on Instagram A post shared by Nandhini Myna (@myna_nandhu) on Aug 24, 2020 at 5:34am PDT
இந்நிலையில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் வரும் காட்டுப் பயலே பாடலுக்கு நின்ற இடத்திலேயே டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் தீ பாடிய காட்டுப் பயலே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அந்த பாடலை கேட்ட நந்தினியால் டான்ஸ் ஆடாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் டான்ஸ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அழகாக இருக்கிறீர்கள். நிறைமாத கர்ப்பிணி செய்யும் வேலையா இது?. ஆனாலும் டான்ஸ் நல்லா இருக்கு அக்கா. நீங்கள் என்ன செய்தாலும் க்யூட்டாக இருக்கிறது. பாப்பா பத்திரம் என்று தெரிவித்துள்ளனர்.

மைனா நந்தினியின் முதல் திருமணம் சோகத்தில் முடிந்தது. அதன் பிறகே அவர் யோகேஸ்வரனை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணம் கடைசி வரை நிலைத்து நிற்க வேண்டும் என கடவுளை பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் அவ்வப்போது கூறி வருகிறார்கள்.

நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தபோது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தப்பட்ட சின்னத்திரை ஷூட்டிங் மீண்டும் துவங்கிவிட்டது. ஆனால் ஷூட்டிங்கிற்கு எல்லாம் போக வேண்டாம் என்று ரசிகர்கள் நந்தினிக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கும், தொழில் அதிபருக்கும் திருமணம் நிச்சயமாகிடுச்சு

கொரோனா பிரச்சனையாக இருக்கும் நேரத்தில் சின்னத்திரை பிரபலங்கள் அடுத்தடுத்து குட் நியூஸ் சொல்வது சந்தோஷமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஹேமாவுக்கு வளைகாப்பு நடந்தது. இப்படி நல்ல விஷயங்களாக நடப்பதை பார்க்க ஆறுதலாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி