ஆப்நகரம்

என்னா ஆட்டம், விஜய் பாட்டுக்கு செமயா டான்ஸ் ஆடிய மைனா நந்தினியின் மாமியார்

விஜய் பாடலுக்கு மைனா நந்தினியின் மாமியார், நாத்தனார், கணவர் யோகேஸ்வரன் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2020, 4:30 pm
சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நந்தினி. மைனா கதாபாத்திரம் மிகவும் பிடித்துவிட்டதால் ரசிகர்கள் அவரை மைனா நந்தினி என்று அன்புடன் அழைக்கிறார்கள்.
Samayam Tamil myna nandhini


கொரோனா லாக்டவுனால் வீட்டில் இருக்கும் மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் விஜய் பட பாடலுக்கு நந்தினியின் கணவர் யோகேஸ்வரன், மாமியார், நாத்தனார் ஆகியோர் டான்ஸ் ஆடியுள்ளனர். அவர்கள் டான்ஸ் ஆடியதை நந்தினி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சும்மா சொல்லக் கூடாது நந்தினியின் மாமியார் சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். அவர் வயது பெண்கள் நடனமாட வெட்கப்படுவார்கள். ஆனால் அவர் அழகாக ஆடியிருக்கிறார். நந்தினி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
View this post on Instagram My Mother in law and my sister-in-law dance performance Vijay sir birthday at my home and my lovely person @yogeshwaram_official A post shared by Nandhini Myna (@myna_nandhu) on Jun 23, 2020 at 7:31am PDT
அடேங்கப்பா, உங்கள் மாமியார் என்ன ஆட்டம் ஆடுகிறார். மாமியார், நாத்தனாரை டான்ஸ் ஆட வைத்து நீங்கள் வீடியோ எடுக்கிறீர்கள் என்றால் அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. முதல் திருமணம் தான் சரியில்லாமல் போனது. நல்ல வேளை அதை நினைத்து பயந்து திருமணமே வேண்டாம் என்று கூறி சிங்கிளாகவே இருக்காமல் இருந்தீர்கள்.

காதல், திருமணம் மீது நம்பிக்கை வைத்ததால் தான் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. இன்று போன்று என்றும் சந்தோஷமாக இருங்கள் அக்கா என்று தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக இப்படி குடும்பத்தார் டான்ஸ் ஆடினால் ஓரமாக நின்று வீடியோ எடுக்கும் ஆள் இல்லை நந்தினி. அவரும் அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவார். ஆனால் தற்போது நந்தினி கர்ப்பமாக இருப்பதால் டான்ஸ் ஆடாமல் வேடிக்கை பார்த்ததுடன் முடித்துக் கொண்டார்.

தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மைனா நந்தினி அண்மையில் தான் தெரிவித்தார். சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் கர்ப்பிணியான நந்தினியை பத்திரமாக இருக்குமாறு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நந்தினிக்கு மீண்டும் கேமராவுக்கு முன்பு நிற்க ஆசையாக இருக்கிறதாம். லாக்டவுனுக்கு முன்பு நந்தினி நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனை கிளி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார்.

நந்தினியின் கணவரோ சத்யா, நாயகி ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். கணவனும், மனைவியும் எப்பொழுதும் தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக இருந்துவிட்டு தற்போது வீட்டில் சும்மா இருக்க போர் அடிக்கிறதாம்.

நந்தினி யோகேஸ்வரனுக்கு முன்பு கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு பிரச்சனை ஏற்படவே நந்தினி கார்த்திகேயனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதையடுத்து கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள நந்தினி தான் காரணம் என்று அவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டினார்கள்.

அந்த துயர சம்பவத்திற்கு பிறகே நந்தினியின் வாழ்வில் யோகேஸ்வரன் வந்தார். யோகேஸ்வரன் நந்தினியை நல்லபடியாக பார்த்துக் கொள்வது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தன் கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை நந்தினி அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களில் எல்லாம் நந்தினி மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

அடுத்த செய்தி