ஆப்நகரம்

Naam Iruvar Namaku Iruvar: நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஐஸ்வர்யா - சின்னராசு போட்ட திட்டம்

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் சின்னராசை அடித்து உதைக்கிறார். அதன் பின் தாலியை காட்டி ஐஸ்வர்யாவை நாளையே திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ள வைக்கிறார்.

Samayam Tamil 9 Apr 2021, 8:33 pm
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஐஸ்வர்யா மற்றும் சின்னராசு இருவரும் முடிவெடுக்கின்றனர்.
Samayam Tamil naam iruvar namaku iruvar serial episode 181 written update maha staps mayan from revealing the truth
Naam Iruvar Namaku Iruvar: நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஐஸ்வர்யா - சின்னராசு போட்ட திட்டம்


உண்மையா சொல்ல வந்த மாயனை தடுத்த மகா

மாயன் மாமனாரிடம் வெளியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது தான் மகாவை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டேன் என்ற உண்மையை அவரிடம் சொல்ல முயற்சிக்கிறார் அவர். ஆனால் அதை மகா சரியான நேரத்தில் வந்து தடுத்து விடுகிறார்.

வேறு யாரும் உங்களிடம் வேறு விதமாக இதைசொல்லுவதர்க்கு முன் நான் கூறிவிடுகிறேன் என அவர் கூறி பேச துவங்கும் நேரத்தில் தான் மகா சரியாக வந்து தடுத்துவிட்டார்.

நீங்க தான் உண்மையில் எங்க வீடு மகாலக்ஷ்மி

அதன் பின் மாயனின் தங்கை கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து அண்ணனிடம் பிரசாதம் தருகிறார். அணிக்காகவும் தான் வேண்டிக்கொண்டேன் என கூறி பிரசாதத்தை அண்ணியிடம் கொடுத்துவிடும்படி கூறுகிறார். ஆனால் நீயே பேசிக்கொள் என அவர் மகாவை அழைத்து பேச வைக்கிறார்.

அவரும் பேசிவிட்டு இறுதியில் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு செல்கிறார். நீங்க 100 வருஷம் நல்லா இருக்கனும் அண்ணி என வாழ்த்திவிட்டு சென்றுவிடுகிறார்.

முத்துராசை அடித்து உதைக்கும் மாயன்

மாயன் மற்றும் கத்தி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது முத்து ராசு அங்கே வருகிறார். போனில் பேசும் அவர் தாலி தயாரா என கேட்கிறார். அதன் பின் மாயனிடம் கோபப்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதனால கோபமான மாயன் அவரை தூக்கிப்போட்டு உதைக்கிறார். அப்போது ஐஸ்வர்யா வந்து மாயனை தடுக்கிறார். மகாவும் வெளியில் வந்து மாயனை சமாதானம் செய்கிறார்.

தாலி ரெடி.. நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்

அதன் பின் ஐஸ்வர்யா மற்றும் சின்னராசு இருவரும் திருட்டு கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். தான் கொண்டு வந்த தாலியை காட்டுகிறார் சின்னராசு. நன்றாக தான் இருக்கிறது, ஆனால் பயமாகவும் இருக்கிறது என சொல்கிறார் ஐஸ்வர்யா.

அவரை பேசி ஒப்புக்கொள்ள வைக்கிறார் சின்ராசு. நாளையே திருமணம் செய்துகொள்ளலாம், என friendக்கு திருமணம் என சொல்லி பட்டுபுடவை உடன் வந்துவிடுகிறேன் என ஐஸ்வர்யா சொல்கிறேன்.

அடுத்த செய்தி