ஆப்நகரம்

Pandian Stores: நீ எப்போ பிள்ளை பெத்துக்க போற.. முல்லைக்கு வந்த சங்கடம்!

பாண்டியன் ஸ்டோர்ஸில் தனத்திற்கு தற்போது குழந்தை பிறந்துவிட்ட நிலையில் அதை பார்க்கவரும் எல்லோரும் முல்லையிடம் எப்போது குழந்தை பெத்துக்க போற என கேட்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Oct 2021, 11:14 am
மீனாவை தொடர்ந்து தற்போது தனத்திற்கும் குழந்தை பிறந்துவிட்டது, தற்போது மீதம் இருக்கும் முல்லையை எல்லோரும் சீண்ட தொடங்கி இருக்கின்றனர்.
Samayam Tamil pandian stores serial today when will you have baby kasthuri questions mullai
Pandian Stores: நீ எப்போ பிள்ளை பெத்துக்க போற.. முல்லைக்கு வந்த சங்கடம்!



குழந்தையை பார்க்க வரும் மீனாவின் அப்பா

மீனாவின் அப்பா மற்றும் அம்மா இருவரும் மூர்த்தி - தனத்தின் குழந்தையை பார்க்க வருகிறார்கள். மீனாவின் அப்பா குழந்தை கையில் பணம் மற்றும் அம்மா தங்கக்காசை கொடுக்கிறார். நகை செய்யும்போது அதை பயன்படுத்திக்கொள் என கூறுகிறார்/

அதன் பின் முல்லையின் அப்பா அம்மா இருவரும் வருகின்றனர். அவர்களும் குழந்தைக்கு நகை கொண்டுவருகின்றனர்.

கயல் பாப்பாவை குறைவாக பேசும் கஸ்தூரி

புதிதாக குழந்தை பிறந்துவிட்டதால் வீட்டில் கயல் பாப்பா மீதான அக்கறையும் குறைந்துவிட்டது. கயலை உள்ளே தூங்க வைத்துவிட்டு வெளியில் தனத்தின் குழந்தையை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கயல் பாப்பாவைவிட தனத்தின் மகன் கலராக இருக்கிறான் என பேசுகிறார் கஸ்தூரி. இதே போன்று அவர் பல விஷயங்களை பேசிக்கொண்டே இருக்கிறார்.

நீ எப்போ குழந்தை பெத்துக்க போற முல்லை

அதன் பின் கஸ்தூரியும் முல்லையின் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு முல்லை வர நீ எப்போ குழந்தை பெத்துக்க போற என கேட்கிறார் கஸ்தூரி. திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது, உங்களுக்கு உடலில் எதாவது பிரச்சனையோ என சீன்றுகிறார் கஸ்தூரி.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை, அக்கா கர்ப்பமாக இருந்தார், அதனால் தான் நாங்கள் வேண்டாம் என இருந்தோம் என முல்லை கூற, உனக்கென ஒரு வாழ்க்கை, குழந்தை இருக்க வேண்டும் என சொல்லி முல்லையின் அம்மா அட்வைஸ் செய்கிறார்.

அடுத்த செய்தி