ஆப்நகரம்

சினிமாக்காரங்க ஏன் கல்யாணம் பண்றாங்க, மனைவியை வச்சு என்ன செய்றாங்க: கார்த்தி பட நடிகை அதிர்ச்சி தகவல்

திரையுலகில் இருக்கும் சிலர் காதலுக்காக திருமணம் செய்து கொள்வது இல்லை மாறாக பணத்திற்காக தான் திருமணம் செய்கிறார்கள் என நடிகை நோரா ஃபதேஹி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை மூலம் கிடைக்கும் ஆதாயம் தான் அவர்களுக்கு முக்கியம் என்கிறார்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 14 Apr 2024, 11:22 am

ஹைலைட்ஸ்:

  • பிரபலங்கள் பற்றி நோரா ஃபதேஹி அதிர்ச்சி தகவல்
  • பாலிவுட் படங்களில் நடிக்கும் நோரா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil nora fatehi
கனடாவில் பிறந்து வளர்ந்த நோரா ஃபதேஹி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட்டில் இருப்பவர்கள் பற்றி நோரா ஃபதேஹி கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் நோரா கூறியதாவது,

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

திரையிலகில் சிலர் பணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சரியான கேம்புக்களில் இருக்க திருமணம் செய்கிறார்கள். ஆதாயத்திற்காக திருமணம் செய்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். நம் புகழை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால் என்னிடம் அப்படி நடக்காது. அதனால் தான் நான் எந்த ஆண்களுடனும் சுற்றுவது இல்லை, மேலும் டேட்டிங் செய்வதும் இல்லை. ஆனால் இது எல்லாம் என் கண் முன்பே நடந்து கொண்டிருக்கிறது.


திரையுலகில் அதிகாரம், ஆதாயத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். பணம், அதிகாரமிக்க ஆட்களின் நட்புக்காக, நெட்வொர்க்கிங் செய்ய தங்களின் மனைவி அல்லது கணவனை பயன்படுத்துகிறார்கள். நான் அவரை திருமணம் செய்து கொண்டால் மூன்று ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கலாம். ஏனென்றால் அந்த பெண்ணின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகிறது, அது எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறுகிறது. அதனால் அவருடன் இருந்தால் நானும் வெற்றி பெறலாம். இப்படி எல்லாம் கணக்கு போட்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

விவாகரத்தா, எங்களுக்கா?: பெட்ரூம் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜோடி

காசுக்காகவும், புகழுக்காகவும் ஆண்களும், பெண்களும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள். காதலிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஆண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்வதை விட வேறு எதுவும் மோசமானதாக இருக்க முடியாது. எங்கள் திரையுகில் பலர் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.


சரியான கேம்ப், ஆட்களுடன் இருக்க இப்படி செய்கிறார்கள். தங்களின் கெரியர் எப்படி போகும் என்பது தெரியாது. அதனால் பேக்கப்பிற்காக இப்படி எல்லாம் பிளான் போடுகிறார்கள். வேலைக்காக தனிப்பட்ட வாழ்க்கை, மனநலம், சந்தோஷத்தை தியாகம் செய்வது எனக்கு புரியவில்லை. வேலை வேலை தான். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை அது வேறு.


இரண்டையும் கலக்கக் கூடாது. அப்படி செய்தால் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது. பேராசை மற்றும் மோசமான நோக்கத்திற்காக தனிப்பட்ட வாழ்க்கையையும், வேலையையும் சேர்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது, இரவில் தூங்க முடிவது இல்லை என்றார்.
எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி