ஆப்நகரம்

போதும் சார் விட்ருங்க.. ஹரியை வெளியில் அனுப்பிய லக்ஷ்மி! புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இன்று லக்ஷ்மி ஹரியை இனி தன் வீட்டுக்கு வரவேண்டாம் என எமோஷ்னலாக தாத்தா முன்னிலையில் கூறிவிடுகிறார்.

Samayam Tamil 29 May 2021, 4:58 am
லக்ஷ்மி ஹோட்டலில் விட்டுவிட்டு வந்த செல்போனை திருப்பி கொடுப்பதற்காக அவரது வீட்டுக்கு போகிறார் ஹரி. லக்ஷ்மி தாத்தாவிடம் சொல்லாமல் ஹோட்டலுக்கு போனது பற்றி அவர்கள் அப்போது பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
Samayam Tamil Pudhu Pudhu Arthangal (Pic Credits: Zee5)


அவர் எந்த தவறும் செய்யவில்லை, நான் தான் வரச்சொன்னேன் என ஹரி கூற, தாத்தா மற்றும் பேரன் இருவரும் சேர்ந்து அவரை திட்டுகின்றனர். அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறுகின்றனர். அவரை அசிங்கமாகவும் பேசுகின்றனர்.

ஒருகட்டத்தில் ஹரியை பிடித்து வெளியில் தள்ள அவர்கள் பார்க்க, லட்சுமி தடுத்து ஹரியிடம் பேசுகிறார். "தயவு செய்து போய்டுங்க சார்' என கூறுகிறார். தாத்தா பற்றி பேசும் அவர் தான் செய்தது தவறு இல்லை எனநாளை உணர்ந்தால் அவர் நிச்சயம் வந்து கூறுவார். அது வரை காத்திருப்பேன். எனக்காக ஆதரவாக பேச நீங்கள் வராதீர்கள்' என கூறிவிடுகிறார்.

இனி நீங்களும் இங்கே வராதீர்கள், நாங்களும் ஹோட்டலுக்கு வரமாட்டோம் என லட்சுமி கூறுகிறார். இந்த பிரச்னையை தூண்டி விட்ட வில்லி பிரதிபா மற்றும் அவரது ஜால்றா பெண்கள் இருவரும் இதையெல்லாம் வெளியில் நின்று ஒட்டுகேட்டுக்கொண்டிருக்கின்றனர். இறுதியாக ஹரி லட்சுமியிடம் 'என்னை மன்னித்துவிடு' என்று மட்டும் கூறிவிட்டு வெளியில் சென்றுவிடுகிறார்.

மற்றொரு பக்கம் பவித்ராவின் தம்பி அருணிடம் உதவி கேட்கிறார் திவ்யா. அவரது தோழி சிக்கலில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றி காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்கிறார். அப்படி செய்தால் மோதிரத்தை திருப்பி கேட்கவே மாட்டேன் எனவும் சொல்கிறார். ஆனால் இந்த விஷயத்தில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என அருண் மற்றும் அவரது நண்பர் தயங்குகின்றனர்.

ஆனால் திவ்யா அருணை நல்லவன் என புகழ்ந்து பேச இறுதியில் அருண் ஒப்புக்கொள்கிறார். தான் எப்போது அழைத்தாலும் திவ்யா தன்னுடன் வரவேண்டும் என்கிற கண்டிஷனை மட்டும் அவர் போடுகிறார். இத்துடன் இன்றய எபிசோடு முடிகிறது.

அடுத்த செய்தி