ஆப்நகரம்

பேத்தியின் போட்டோவை வெளியிட்ட ராதிகா சரத்குமார்: சுத்திப் போடச் சொல்லும் ரசிகர்கள்

ராதிகா சரத்குமார் தன் செல்ல பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 16 Jun 2020, 12:23 pm
ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் மிதுன் கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தன் அம்மாவின் பெயரை லைட்டாக மாற்றி ராத்யா என்று பெயர் வைத்துள்ளார். ராத்யாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிடுமாறு ராதிகாவின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
Samayam Tamil radhika sarathkumar


இந்நிலையில் செல்ல பேத்தி, கணவர் சரத்குமாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ராதிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

குட்டிப் பாப்பா ரொம்ப க்யூட்டாக இருக்கிறது. அழகான குடும்பம் ராதிமா. சுத்திப் போடுங்க எங்க கண்ணே பட்டுடும் போல. இந்த புகைப்படத்தை பார்க்க தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம். உங்களை பார்த்தால் பேரன், பேத்தி எடுத்தவர் போன்றே தெரியவில்லை. இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் ராதிமா என்று தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் என்று பிசியாக இருந்த ராதிகா சரத்குமாருக்கு இந்த லாக்டவுனால் கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை செய்வதுடன், மகன் ராகுலுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்க உதவியும் செய்து வருகிறார் ராதிகா. என்ன தான் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் பக்கம் கண்டிப்பாக வருவார் அவர். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், அவர்களை வாழ்த்தியும் ட்வீட் போடுவார்.

ராதிகாவின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ரயன் மிதுன் தன் செல்ல மகளின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். ரயன் மிதுனுக்கு 2 வயதில் தாரக் என்கிற மகன் இருக்கிறார். தாரக் தன் தங்கச்சி பாப்பாவை கொஞ்சியபோது எடுத்த புகைப்படங்களை ரயன் மிதுன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram Say hello to Radhya ❤️ A post shared by Rayane Mithun (@rayanemithun) on Jun 14, 2020 at 9:27am PDT
ரயன் மிதுன் பெரும்பாலும் தன் பிள்ளைகள், கணவரின் புகைப்படங்களை தான் வெளியிட்டு வருகிறார். 2 வயது தாரக் வாஷின் மெஷினில் துவைக்க துணியை போடும்போது எடுத்த வீடியோவை ரயன் மிதுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு வேலை கொடுங்கள், எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுங்கள், அதை பழக்கமாக்குங்கள். வேலை செய்ய ஆண், பெண் வித்தியாசம் இல்லை. அவனுக்காக பாவப்பட வேண்டாம். அவன் விரும்பியே வேலை செய்கிறான் என்று மகன் வேலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார் ரயன் மிதுன்.
View this post on Instagram Responsibility starts young. Give them chores, teach them how to do it and make it a habit. Chores don’t need to differ with gender. Don’t feel bad for him, he loves doing it. #younggentleman A post shared by Rayane Mithun (@rayanemithun) on May 7, 2020 at 11:22pm PDT
எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பிரச்சனையாக உள்ளது. சமூக வலைதளங்கள் பக்கம் வந்தாலே கொரோனா பிரச்சனை, அந்த பிரச்சனை, இந்த பிரச்சனை, அவர் இறந்துவிட்டார், இவர் பலியாகிவிட்டார் என்று சோகமாக இருக்கிறது. இந்நிலையில் ராதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஆறுதலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட சின்னத்திரை ஷூட்டிங் மீண்டும் துவங்கிவிட்டது. செட்டில் அதிகபட்சமாக 60 பேர் தான் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது பத்திரமாக இருக்கவும் ராதிமா என்று ரசிகர்கள் ராதிகா சரத்குமாருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி