ஆப்நகரம்

திடீரென மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் மாமியார்.. ராஜா ராணி 2 வில்லி பார்வதி ஷாக்

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா - சரவணன் பற்றி வில்லி பார்வதி தவறாக பேச அவரை கண்டிக்கிறார் சிவகாமி. திடீரென இப்படி பல்டி அடிச்சுட்டாரே?

Samayam Tamil 14 Apr 2021, 6:37 am
ராஜா ராணி 2ல் நேற்று ஒரு குப்பை தொட்டிக்காக ஒரு பெரிய சண்டை வீட்டில் நடந்து முடிந்திருக்கிறது.
Samayam Tamil raja rani 2 serial update sivagami slam parvathy for fuming about saravanan and sandhiya
திடீரென மருமகளுக்கு சப்போர்ட் செய்யும் மாமியார்.. ராஜா ராணி 2 வில்லி பார்வதி ஷாக்


நானே தான் வாங்கி கொடுத்தேன்

சந்தியா இந்த குடும்பத்தின் பழக்க வழக்கங்களை மாற்றுகிறார் என சிவகாமி குற்றம்சாட்டுகிறார். இங்கு குப்பை தொட்டி வைப்பவர் நாளை என்ன வேண்டுமானாலும் மாற்றுவார். இந்த இடத்தில இப்படி தான் வாழ முடியும். நீ ஒருவர் மட்டும் குப்பை தொட்டி பயன்படுத்தினால் மற்றவர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா என கேட்கிறார் அவர்.

அதன் பின் பேசும் சரவணன் தான் தான் குப்பை தொட்டி வாங்கி கொடுத்தேன், சந்தியா கேட்கவே இல்லை என தெரிவிக்கிறார். ஆனால் வழக்கம்போல மற்றவர்கள் அவரை குறை கூறுகின்றனர்.

அடிபட்டு வரும் மாமனார்

அந்த நேரத்தில் சந்தியாவின் மாமனார் காலில் அடிபட்ட நிலையில் வீட்டுக்கு வருகிறார். என்ன என கேட்டதற்கு யாரோ ஒருவர் ரோட்டில் வாழைப்பழ தோலை போட்டதால் தான் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறுகிறார்.

குப்பை தொட்டியில் போட்டு இருந்தால் இப்படி நடந்து இருக்காதே என மயிலு கூறுகிறார். அப்போ சந்தியா செய்ததும் சரிதானே என கேட்கிறார் அவர்.

இதனால் சிவகாமிக்கு பெரிய நோஸ்கட் ஏற்படுகிறது. எப்படியோ சமாளித்துவிட்டு செல்கிறார்.

சந்தியாவுக்கு சப்போர்ட் செய்யும் சிவகாமி

அதன் பின் கடையில் சந்தியா சரவணன் இருவரும் ஜிலேபி போட்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பதை பார்த்து பார்வதி கொந்தளிக்கிறார். அதை கேட்டு சிவகாமி அவரை திட்டுகிறார். கணவன் மனைவி இப்படி இருப்பதில் என்ன தப்பு, உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது என கூறி திட்டுகிறார்.

திடீரென இப்படி பல்டி அடித்துவிட்டாரே அம்மா என பார்வதி அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி