ஆப்நகரம்

பாப்பாவுக்கு அரை வயசு.. மகளின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட ரியோ ராஜ்

ரியோ ராஜ் மற்றும் ஸ்ருதி இருவரும் தங்கள் 6 மாத மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

Samayam Tamil 8 Sep 2020, 4:46 am
தமிழ் சின்னத்திரையில் மிக்வும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரியோ ராஜ். அவர் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமாக இருந்த நேரத்தில், சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீரியலில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். அதற்கு பிறகு சினிமாவிலும் அவர் ஹீரோவாக நுழைந்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் சென்ற வருடம் வெளிவந்து இருந்தது.
Samayam Tamil Rio Raj and Sruthi with daughter Rithi


ரியோ ராஜுக்கும் மனைவி ஸ்ருதிக்கும் கடந்த மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதை மிகவும் மகிழ்ச்சியாக ரியோ சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். என் உலகத்தை ஆட்சி செய்ய இளவரசி வந்துவிட்டாள். ஆம் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலம்" என ரியோ கூறி இருந்தார்.

ரியோவுக்கும் ஸ்ருதிக்கும் கடந்த 2017ல் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி இருந்தார்கள்.

ரியோ - ஸ்ருதி ஜோடி அவர்கள் மகளுக்கு ரிதி என பெயரிட்டிருக்கிறார்கள். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில் முதல் முறையாக தற்போது செல்ல மகளின் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்கள். மகளுக்கு சரியாக அரை வயது முடிவதை கொண்டாடும் வகையில் தான் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரியோ வெளியிட்டு இருக்கிறார். ரியோவின் மனைவி ஸ்ருதியும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.


இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். சின்னத்திரை பிரபங்கள் பலரும் ரிதிக்கு வாழ்த்து கூறி கமெண்டில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து இருந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தினை சிவகார்த்திகேயன் தான் தயாரித்து இருந்தார். அவருக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக ரியோ கூறி வருகிறார்.

"என்னை நானே பெரிய திரையில் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். இந்த படம் என்னை ஒரு நடிகன் ஆக்கியது, ஒரு சிறந்த இயக்குனரை எனக்கு கொடுத்தது, ஒரு சிறந்த தயாரிப்பாளரையும் கொடுத்தது, அதைவிட மேலாக எனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைத்தது. சீக்கிரமா இன்னொரு படம் பண்ணுவோம். என் மீதும் என் குழுவினர் மீதும் நம்பிக்கை வைத்ததற்காக நான் சிவகார்த்திகேயன் சாருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.

ரியோ ராஜ் போலவே சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான். அவர் தற்போது மற்ற திறமையான இளம் நடிகர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி