ஆப்நகரம்

கொரோனா எஃபெக்ட்: கணவருக்கு மாஸ்க் டூ மாஸ்க் முத்தம் கொடுத்த நடிகை

தொலைக்காட்சி நடிகை நித்யா ராம் மாஸ்க் அணிந்து தனது கணவருக்கு முத்தம் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2020, 5:10 pm
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் சின்னத்திரை, பெரியதிரை பிரபலங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். வீட்டில் சமையல் செய்வது, துணிகளை அடுக்கி வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று வேலை பார்த்து அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
Samayam Tamil nithya ram


இந்நிலையில் நந்தினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நித்யா ராம் மாஸ்க் அணிந்து தனது கணவருக்கு லிப் டூ லிப், அவரும் மாஸ்க் அணிந்திருக்கிறார், அதனால் மாஸ்க் டூ மாஸ்க் முத்தம் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு பொறுப்புடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவும் இப்படித் தான் மாஸ்க் போட்டு தன் காதலருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

View this post on Instagram Romance responsibly 💏 #coronaeffect😷 #staysafe #neverstopromance❤️ A post shared by Nithya Ram (@nithyaraam) on Mar 20, 2020 at 8:19pm PDT


அதை பார்த்த ரசிகர்களோ, என்ன நித்யாக்கா போயும் போயும் பூனம் பாண்டேவையா காப்பியடிப்பீர்கள். என்னமோ கவுதம் மாமாவுடன் சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று தெரிவித்துள்ளனர்.

வர, வர வீட்டில் நடக்கும் அனைத்தையும் இந்த நடிகைகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளம்பரம் தேடுகிறார்கள். அந்தரங்கத்தை கூட விளம்பரம் தேட பயன்படுத்துகிறார்களே என்று நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

ஹய்யோ, மோடிஜி சொன்னதை இப்படி தப்பா புரிஞ்சுக்கிடீங்களே விஜே மணிமேகலை

அடுத்த செய்தி