ஆப்நகரம்

பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேறிய ரோஷ்ணி! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?

பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் ரோஷ்ணி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பாரதி கண்ணம்மாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 26 Oct 2021, 8:54 am
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியளுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ரோஷ்ணி ஹரிப்ரியன் நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Samayam Tamil roshni haripriyan quits barathi kannamma serial say reports
பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியேறிய ரோஷ்ணி! என்ன நடக்கிறது விஜய் டிவியில்?


இந்நிலையில் ரோஷ்ணி தற்போது பாரதி கன்ணனம்மாவில் இருந்து வெளியேறி இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

ரோஷ்ணிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தததால் தான் அவர் இந்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி கண்ணம்மாவாக வேறு ஒரு நடிகை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கும் நடிகை காவ்யா கவின் ஜோடியாக நடிக்கபோகிறார் என்றும், அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் வந்த நிலையில், தற்போது ரோஷ்னி பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியே போகிறார் என்கிற தகவல் விஜய் டிவி ரசிகர்களை மேலும் அதிர்ச்சி ஆக்கி உள்ளது.

அடுத்த செய்தி