ஆப்நகரம்

நடிகர்கள் என்றால் இவ்ளோ இளக்காரமா.. பொங்கிய பிக் பாஸ் சனம் ஷெட்டி

சித்தார்த்துக்கு கொலை மிரட்டல் விடுத்து தினமும் 500 போன் கால்கள் பாஜகவினரிடம் இருந்து வருவதாக தெரிவித்து உள்ளார். இந்த சர்ச்சையில் சித்தார்த்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Samayam Tamil 29 Apr 2021, 9:57 pm
சித்தார்த்தின் போன் நும்பரை லீக் செய்த பாஜக, 500 மிரட்டல் போன் கால்கள் வந்ததாக சர்ச்சை. சனம் ஷெட்டி தற்போது நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
Samayam Tamil sanam shetty supports siddharth in controversy condemns bjp for phone number leak and harassment
நடிகர்கள் என்றால் இவ்ளோ இளக்காரமா.. பொங்கிய பிக் பாஸ் சனம் ஷெட்டி



சித்தார்த்தும் சர்ச்சையும்

நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவர் அரசியல், சமூக பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாம் அலை பற்றியும் அவர் பேசி வருகிறார்.

தொடர்ந்து மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அவர் பதிவிட்டு வருகிறார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கூறியிருந்த கருத்து பற்றி சித்தார்த் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருக்கிறது. சித்தார்த்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

போன் நம்பர் லீக்

இந்நிலையில் சித்தார்த்தின் போன் நம்பர் சமூக வலைதளங்களில் பாஜகவினர் கசியவிட்டு இருக்கின்றனர். அதனால் சித்தார்த்துக்கு அதிகம் மிரட்டல் போன் கால்கள் வருகின்றதாம். இது பற்றி அவரே ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் தனக்கு 500 போன் கால்களில் கொலை மிரட்டல் வருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

சித்தார்த்துக்கு ஆதரவாக தற்போது நெட்டிசன்கள் களமிறங்கி இருக்கின்றனர். #IStandWithSiddharth என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொந்தளித்த சனம் ஷெட்டி

சித்தார்த்துக்கு ஆதரகவா தற்போது சனம் ஷெட்டி கருத்து பதிவிட்டு இருக்கிறார். "இது மிகவும் அச்சுறுத்தலான ட்ரெண்ட். அது நம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இதை அனுமதிக்கவே முடியாது. நடிகர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா. நம்மை அமைதியாக்க போடும் உழைப்பை அவர்கள் தற்போது உயிரை காக்கவும், பிரச்னையை தீர்ப்பதிலும் போட வேண்டும்."

"அடிபணியாமல் தைரியமாக பேசிய சித்தார்த் உடன் ஆதரவிக்கு நான் நிற்கிறேன். இது சுதந்திர இந்தியா."

இவ்வாறு சனம் ஷெட்டி பதிவிட்டு உள்ளார்.

ட்விட்

அடுத்த செய்தி