ஆப்நகரம்

பூமியில் விழும் சீன ராக்கெட்.. இவங்க தொல்லை தாங்க முடியல: சீனாவை திட்டிய நடிகை சாண்ட்ரா

கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் பூமியில் விழ உள்ள நிலையில், சீனாவை திட்டி நடிகை சாண்ட்ரா எமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

Samayam Tamil 8 May 2021, 2:27 am
இவங்க தொல்லை தாங்க முடியல என சீனாவை திட்டி இருக்கிறார் சீரியல் நடிகை சாண்ட்ரா எமி
Samayam Tamil sandra amy furious post about chinese rocket falling back on earth
பூமியில் விழும் சீன ராக்கெட்.. இவங்க தொல்லை தாங்க முடியல: சீனாவை திட்டிய நடிகை சாண்ட்ரா


சீன ராக்கெட்

சீனா விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்திய ராக்கெட்டின் பெரிய பாகம் ஒன்று இந்த வார இறுதியில் பூமியில் விழ உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அது கடலில் விழுமா, நாட்டின் மீது விழுமா என்பதை கணிக்கும் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கொரோனாவால் தற்போது இந்தியாவில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இது வேறா என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இவங்க தொல்லை தாங்க முடியல: சாண்ட்ரா

பிரபல நடிகையும், பிரஜினின் மனைவியுமான சாண்ட்ரா சீன ராக்கெட் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

"இவனுங்க தொல்லை தாங்கல.. மாஸ்க் வைக்க வெச்சிட்டாங்க. அடுத்து ஹெல்மெட். அப்புறம் மூக்கிலே பஞ்சு. விழுறது அவனுங்க மேலையே விழுந்தா எவ்வளவு நல்லாருக்கும்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சாண்ட்ராவின் பதிவு

View this post on Instagram A post shared by Sandra Amy Prajin (@sandra_amy_prajin)

அடுத்த செய்தி