ஆப்நகரம்

ஆதியை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் மேத்தா! செம்பருத்தி சீரியலில் இன்று

10 கோடி மோசடி செய்தது தான் என ஒப்புக்கொள்ளும் மேத்தா ஆதியை அலுவலகத்தில் இருந்து வெளியில் துரத்துகிறார்.

Samayam Tamil 9 Jun 2021, 3:38 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் ஆதிக்கடவூர் டிரஸ்ட் என பெயர் வைத்து அதில் 10 கோடி ருபாய் மோசடி செய்த நபர் பற்றிய விவரம் ஆதிக்கு தெரியவருகிறது.
Samayam Tamil sembaruthi serial today mehtha accepts his wrong doings to defame akhila
ஆதியை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் மேத்தா! செம்பருத்தி சீரியலில் இன்று


மேத்தா அலுவலகத்தில் காத்திருக்கும் ஆதி

ரகுநாத் மேத்தா என்ற நபர் தான் இந்த மோசடியை செய்து இருக்கிறார். அவரது அலுவலகம் இருக்கும் இடத்தை கண்டறிந்து அங்கு ஆதியும் பார்வதியும் செல்கின்றனர். அங்கு அப்பாயிண்ட்மென்ட் இல்லாததை காரணம் காட்டி அவர்கள் இருவரையும் காத்திருக்க வைக்கின்றனர்.

பல மணி நேரமாக காத்திருக்கின்றனர். ஆனால் மேத்தா அவர்களை வேண்டுமென்றே காத்திருக்க வைத்துவிட்டு சிசிடிவியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கோபப்பட்ட பார்வதி

ஐந்து மணி நேரமாக காத்திருந்த பிறகும் மேத்தாவை சந்திக்க அழைக்கவில்லை என சொல்லி கோபமாக ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் பேசுகிறார் பார்வதி. அவரை அமைதியாக இருக்கும்படி ஆதி கேட்கிறார்.

ஆனால் பார்வதி கத்திய பிறகு தான் அந்த பெண் மேத்தாவுக்கு போன் செய்து பேசுகிறார். அதன் பின் தான் அவர்களை உள்ளே அழைக்கிறார் அவர்.

நான் தான் செஞ்சேன்..

ஆதி மேத்தாவிடம் ஆதிக்கடவூர் டிரஸ்ட் பற்றியும், அந்த மோசடியை செய்தது நீங்கள் தானே என கேட்கிறார். அவரும் ஆரம்பத்தில் கோபப்படுவது போல பேசிவிட்டு, ஆமாம் நான் தான் செய்தேன் என சொல்கிறார். அகிலாவின் பெயரை கெடுப்பதற்கு தான் இப்படி செய்தேன் என கூறுகிறார் அவர்.

இதனால் கோபமான ஆதி அவரை அடிக்க போகிறார். அதனால் அவரது ஆட்கள் ஆதியை பிடித்து வெளியில் தள்ளுகிறார்கள்.

அதன் பின் வில்லி நந்தினிக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

அடுத்த செய்தி