ஆப்நகரம்

Sembaruthi Serial: பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து வாக்கு கொடு! அகிலாவிடம் கேட்கும் வில்லி

மகன் திருமணத்தில் அகிலாவால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக அவரது பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து வாக்கு கொடுக்கும்படி கேட்கிறார் ராஜேஸ்வரி.

Samayam Tamil 9 Apr 2021, 11:10 pm
செம்பருத்தி சீரியலில் இன்று வில்லி ராஜேஸ்வரி அகிலாவிடம் வந்து ஒரு சத்தியம் கேட்கிறார். நந்தியின் திட்டத்தை கேட்டு தான் அவர் இப்படி செய்திருக்கிறார்.
Samayam Tamil sembrauthi serial review aadhi saves bhavani rajeswari tactically plans to get promise from akhila
Sembaruthi Serial: பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து வாக்கு கொடு! அகிலாவிடம் கேட்கும் வில்லி


பவானியை காப்பாற்றும் ஆதி

வில்லி ராஜேஸ்வரியின் ஆட்கள் தன்னை கொலை செய்ய துரத்துகிறார்கள் என பவானி ஆதிக்கு போன் செய்கிறார். அவரை தேடி செல்கிறார் ஆதி. சரியான நேரத்தில் அவர் பவானி இருக்கும் இடத்திற்கு சென்று சேர்கிறார்.

ரௌடிகள் உடன் சண்டைபோட்டு அவர் பவானியை காப்பாற்றுகிறார். இறுதியில் ராஜேஸ்வரியின் தம்பியையும் அடித்து உதைக்கிறார். 'யார் தடுத்தாலும் பவானி - மகேஷ் திருமணத்தை நானும் பார்வதியும் நிச்சயம் செய்து வைப்போம். உங்க அக்கா கிட்ட போய் சொல்லு' என கூறிவிட்டு சொல்கிறார்.

உதவிக்கு வந்த நந்தினி

பாவாப்பிணியை கொல்லாமல் ஆதியிடம் தம்பி அடிவாங்கிவிட்டு வந்ததால் ராஜேஸ்வரி டென்ஸனாக இருக்கிறார். அந்த நேரத்தில் நந்தினி அவருக்கு போன் செய்கிறார்.

தற்போது பார்வதிக்கு ஆதரவாக ஆதி வந்தது போல விரைவில் ஆதிக்கு ஆதரவாக அகிலாண்டேஸ்வரியே வரலாம் என சொல்கிறார் நந்தினி. அதை தடுக்க ராஜேஸ்வரிக்கு அவர் ஒரு ஐடியா கொடுக்கிறார் அவர்.

நான் சொன்னபடி அந்த சத்தியத்தை மட்டும் அகிலாவிடம் இருந்து வாங்கிவிட்டால் நிச்சயம் அகிலாவால் எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார்.

அகிலாவிடம் சத்தியம் கேட்கும் ராஜேஸ்வரி

அதன் பின் ராஜேஸ்வரி அவரது வருங்கால சம்பந்தியை அழைத்துக்கொண்டு அகிலாவின் வீட்டுக்கு செல்கிறார். "என மனதில் ஒரு பயம் இருக்கிறது. அதனால் இதில் எனக்கு உறுதி வேண்டும் என கேட்கிறார். அதற்காக உங்கள் பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து வாக்கு கொடுக்கவேண்டும் என கேட்கிறார்.

இதற்கு அகிலா என்ன பதில் சொல்ல போகிறார் என்பது நாளை தான் தெரியவரும்.

அடுத்த செய்தி