ஆப்நகரம்

இந்த வயதிலும் இப்படியா.. கண்ணான கண்ணே பப்லுவின் வெறித்தனமான வீடியோ

கண்ணான கண்ணே சீரியல் நடிகர் பப்லு பிரித்விராஜ் இந்த வயதிலும் உடலை கட்டுடன் வைத்திருப்பதற்காக செய்யும் உடற்பயிற்சி வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு இருக்கிறார்கள்.

Samayam Tamil 6 Aug 2021, 1:04 am
சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் தற்போது நடித்து வருகிறார் பப்லு பிரித்விராஜ். அந்த சீரியலில் மீரா - யுவா திரும்ணம் கடந்த பல வாரங்களாக பரபரப்பாக ஓடிய நிலையில் ஒருவழியாக அது நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது திருமணத்தில் நடந்த குளறுபடிகள் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க கவுதம் சிசிடிவி காட்சிகளை பார்க்க முயற்சிப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil Babloo


கண்ணான கண்ணேவில் பிசியாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ் உடற்பயிற்சியில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஒர்கவுட் வீடியோகளை பார்த்து பிரமிக்காதவர்கள் இருக்க முடியாது.

அந்த அளவுக்கு வெறித்தனமாக அவர் வெளியிடும் ஒர்கவுட் வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஹல்க் புகைப்படத்தின் முன்பு நின்று பப்லு ஒர்கவுட் செய்து இருக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது வேற லெவல் என தெரிவித்து வருகின்றனர். இந்த் வயதிலும் இப்படியா என்றும் சில வியந்து கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

View this post on Instagram A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

அடுத்த செய்தி