ஆப்நகரம்

விஜய்க்கு பலமுறை முத்தம் கொடுத்துருக்கேன்: வில்லங்கமான கேள்விக்கு ஆனந்தியின் பதில்.!

சீரியல் நடிகை ஆனந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Jun 2022, 6:06 pm
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர் ஆனந்தி. அவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நெகடிவ் ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அளித்துள்ள பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Anandhi Ajay
Anandhi Ajay


கோவையை சேர்ந்த ஆனந்தி திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆனந்தி ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பலரும் பல விதமான கேள்விகள் கேட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது ஒருவன் 'உங்களுக்கு முத்தம் கொடுக்க ஆசை' என ஏடா கூடமாக கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆனந்தி "நானும் தளபதி விஜய் போஸ்டருக்கு பல முறை முத்தம் கொடுத்திருக்கிறேன். நீயும் follow பண்ணு" என குறிப்பிட்டுள்ளார். ஆனந்தி மிக தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டான்’ படத்தில் நடிக்க மறுத்த உதயண்ணா: அதுக்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.!
அதே போல் அக்கா கர்ப்பமா இருக்கீங்களா? என கேட்டதிற்கு பயப்புள்ளைங்க எப்படி கண்டுபிடிக்குதுங்க என பதில் அளித்தார். மேலும் ஆனந்தியிடம் பலரும் டயட் பிளான் கேட்டனர். அதற்கும் ஆனந்தி பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி