ஆப்நகரம்

Cook with Comali: வெளியேறிய முக்கிய போட்டியாளர்! குக் வித் கோமாளி 2 செமி பைனலில் யாருமே எதிர்பார்க்காதது

குக் வித் கோமாளி 2ல் இருந்து இன்று ஷகீலா எலிமினேட் ஆனார்.

Samayam Tamil 21 Mar 2021, 11:13 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் இரண்டாவது சீசனில் இன்று செமி பைனல் நடைபெற்றது.
Samayam Tamil shakeela eliminated from cook with comali 2 semi finals
Cook with Comali: வெளியேறிய முக்கிய போட்டியாளர்! குக் வித் கோமாளி 2 செமி பைனலில் யாருமே எதிர்பார்க்காதது


செமி பைனல்

குக் வித் கோமாளி 2ம் சீசனின் செமி பைனலில் sea food சமைக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. நேற்று நடந்த advantage டாஸ்கில் கனி ஜெயித்ததால் அவருக்கு இன்றைய செமி பைனல் போட்டியில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று அவர் என்ன சமைக்க வேண்டும் என்பதற்கான பொருளை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது தான்.

மேலும் மற்றவர்கள் என்ன சமைக்க போகிறார்கள் என்பதையும் அவர் தான் தீர்மானிப்பார் என சொல்லப்பட்டது.

(Pic Credits: Hotstar)

வசமாக மாட்டிய பாபா பாஸ்கர் மாஸ்டர்

கனி promfret மீனை சமைக்கப்போவதாக முதலில் தேர்ந்தெடுத்தார். அதன் பின் ஷகீலாவுக்கு squid கொடுத்தார்.

ஏற்கனவே கனி மற்றும் பாபா பாஸ்கர் இடையே ஒருவிதமான மனக்கசப்பு இருந்து வரும் நிலையில், பாபா பாஸ்கருக்கு lobster சமைக்க வேண்டும் என கொடுத்தார் கனி. அதை இதுவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது என கூறினார் பாபா பாஸ்கர்.

அஸ்வினுக்கு prawn கொடுக்கப்பட்டது. தனக்கு sea food என்றாலே பிடிக்காது என கூறிய அஸ்வின், இதை எப்படி செய்ய போகிறேன் என கூறி புலம்பினார் அவர்.

பைனலுக்கு முன்னேறிய இருவர்

இந்த சுற்றின் முடிவில் இரண்டு பேர் நேரடியாக பைனலுக்கு முன்னேற உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. கனி தான் முதல் ஆளாக பைனலுக்கு முன்னேறினார். அதன் பின் அஸ்வின் இரண்டாவதாக பைனலுக்கு சென்றார். அவருக்கு இது மிகவும் ஆச்சர்யமானதாக இருந்தது.

கோமாளியாக வந்த பாலா தான் தனக்கு இதை செய்ய அதிகம் உதவியதாக கூறி அவருக்கு நன்றி கூறினார். இதுவரை பலர் பாலா உடன் இணைந்ததால் எலிமினேட் ஆகி இருக்கும் நிலையில், 'பாலா உடன் சேர்ந்தால் எலிமினேஷன் தான்’ என ஒரு விமர்சனம் வந்தது, அவர்களுக்கு இது பதிலடி என பாலா கூறினார்.

ஷகீலா எலிமினேஷன்

அதன் பின் பாபா பாஸ்கர் மற்றும் ஷகீலா இடையே எலிமினேஷனுக்கான போட்டி நடந்தது. அதில் மாங்காயை வைத்து சமைக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது.

ஷகீலா மிக எளிமையாக மாங்காய் சாதம் செய்து விட, பாபா பாஸ்கர் அதிகம் மெனக்கெட்டு துபாய் ஸ்வீட் ஒன்றை செய்தார். நடுவர்களுக்கும் அது அதிகம் பிடித்து இருந்தது.

இறுதியில் பாபா பாஸ்கர் மூன்றாவது ஆளாக பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ஷகீலா எலிமினேட் ஆனார். தான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் என கூறிய ஷகீலா, தனது இமேஜை மாற்றிய குக் வித் கோமாளிக்கு நன்றி கூறினார்.

அடுத்த செய்தி