ஆப்நகரம்

மாலத்தீவில் கவர்ச்சி புயலாக மாறிய ஷிவானி நாராயணன் - ஹாட் புகைப்படங்கள்

நடிகை ஷிவானி நாராயணன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடை உட்பட செம கவர்ச்சியான உடைகளில் போட்டோ எடுத்து வெளியிட்டு வருகிறார். அவை வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 27 Mar 2021, 12:55 am
பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன். அவர் அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே யாருடனும் சரியாக பேசாமல் பழகாமல் இருந்ததால் விமர்சனத்தை சந்தித்தார். மேலும் தொடர்ந்து பல வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தும் எதுவும் பெரிதாக கன்டென்ட் கொடுக்காததால் ஷிவானி உள்ளிட்ட சிலர் 'மிச்சர் சாப்பிட்டு கொண்டிருகிறார்கள்' என்று கூட ட்ரோல் செய்தார்கள்.
Samayam Tamil Shivani Narayanan


அத்தனை விமர்சனங்களை தாண்டி ஷிவானி இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் தான் இருந்தார். அவர் டிக்கட் டு ஃபினாலே டாஸ்கில் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால் சிங்கப்பெண்ணே பாடல் போடப்பட்டது. அந்த வாரம் தான் அவர் எலிமினேட் ஆனார் என்றாலும் அதிகம் பாரராட்டுகள் அவருக்கு கிடைத்தது.

பிக் பாஸ் மூலமாக ஷிவானியின் ரசிகர் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஷிவானி ஆக்டிவாக தான் இருக்கிறார். ரசிகர்களுக்காக தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி தனது அம்மா உடன் சேர்ந்து மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மாலத்தீவில் கவர்ச்சி புயலாக மாறி ஷிவானி படுக்கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து வருகிறார்.

அந்த புகைப்படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. சமீப நாட்களில் இணையத்தில் அவரது புகைப்படங்கள் அதிகம் வைரலாவதையும் பார்க்க முடிகிறது.

View this post on Instagram A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

View this post on Instagram A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

View this post on Instagram A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

View this post on Instagram A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

அடுத்த செய்தி