ஆப்நகரம்

இந்த அசிங்கம் தேவையா.. பிக் பாஸ் முகேனால் மாட்டிய சூரி (வீடியோ)

வேலன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடுவது போல சூரி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார், ஆனால் இறுதியில் அவர் முகேனால் சிக்கிக்கொண்டார்.

Samayam Tamil 22 Apr 2021, 2:17 am
பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் வேலன் படத்தில் சூரி காமெடியனாக நடித்து வருகிறார்.
Samayam Tamil soori and mugen rao funny video from velan sets makes fan laugh
இந்த அசிங்கம் தேவையா.. பிக் பாஸ் முகேனால் மாட்டிய சூரி (வீடியோ)


வேலன் பட ஷூட்டிங்

வேலன் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு முகேன் நடிக்கும் முதல் பட மீது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு முன் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த ஆரவ் உள்ளிட்ட நடிகர்கள் சினிமாவில் ஜெயிக்கமுடியாமல் திணறுகின்றனர். ஆனால் முகேனுக்கு இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது.

வேலன் படத்தில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார்.

சூரி செய்த அட்ராசிட்டி

சூரி தன் முன் கேமரா வைத்து பாடுவது போல செய்கிறார். அவரது குரலா இது எனநாம் அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் போதே சூரி செய்த கோல்மால் தெரியவந்துவிடுகிறது. முகேன் தான் பாடிக்கொண்டிருக்கிறார். சூரி அதற்கு வாய் மட்டும் அசைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

முகேன் தண்ணீர் குடித்தது தெரியாமல் அவர் பாடுவது போல தொடர்ந்து நடித்ததால் சிக்கிக்கொண்டார்.

இது காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு நிமிஷம் நான் பாடுறதை கேளுங்க

View this post on Instagram A post shared by Actor Soori (@soorimuthuchamy)

அடுத்த செய்தி