ஆப்நகரம்

வெண்பாவின் கனவை தகர்த்த கண்ணம்மாவின் மாமியார்!

பாரதியை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள முயன்ற வெண்பாவிற்கு நேர்ந்த அதிர்ச்சியை இங்கே காணலாம்.

Samayam Tamil 11 Dec 2020, 1:20 pm
பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள கோவிலில் தாலியுடன் காத்திருக்கிறார். அதற்குள் கண்ணம்மா தனது சித்தியுடன் கோவிலுக்கு சென்று பாரதியுடன் முறையிடுகிறார். அதிசயமாக கண்ணம்மாவின் சித்தி அவருக்கு சாதகமாக பேசுகிறார். திருமணத்தை நிறுத்த பாரதியின் குடும்பமே ஒன்று கூடிவிட்டது. ஆனாலும் வெண்பாவை தான் கரம் பிடிப்பேன் என்று நிற்கிறார் பாரதி.
Samayam Tamil Bharathi Kannamma Serial


இந்த இடத்தில் தான் டிவிஸ்ட். பாரதியின் அம்மா அதிரடியாக எண்ட்ரி கொடுக்கிறார். அவ்வளவு தான் ஆடிப் போய் விட்டார் வெண்பா. கண்ணம்மாவுக்கு ஆதரவாக பேசும் மாமியார் மகனை கண்டிக்கிறார்.

சிவகாமியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் அர்ச்சனா.. ராஜா ராணி 2 அப்டேட்

அதோடு வெண்பாவை, "நீ இவ்வளவு கேடுகெட்டவள் என்று தெரிந்திருந்தால் உன்னை வீட்டுக்குள் சேர்த்திருக்க மாட்டேன்." என்று கண்டபடி மிரட்டுகிறார். பாரதியிடம் ’நீ தைரியமான ஆளா இருந்தா, வெண்பா கழுத்துல தாலிய கட்டுடா’ என்று தனது பாணியில் மிரட்டுகிறார்.

அவ்வளவு தான் கையில் தாலியுடன் பயந்து நிற்கிறார் பாரதி. இப்படியாக இன்றைய ப்ரமோ உள்ளது. பாரதி கண்ணம்மாவை ஏற்பாரா அல்லது வெண்பாவை திருமணம் செய்வாரா என்பது வரும் நாட்களில் தெரியும்.

அடுத்த செய்தி