ஆப்நகரம்

Sundari Serial: சுந்தரியை உங்க வீட்டு வேலைக்காரியா அனுப்பல.. குறை சொல்லும் சுந்தரி குடும்பத்தினர்

சுந்தரி சீரியலில் இன்று சுந்தரியின் குடும்பத்தினர் மாப்பிள்ளை இன்னும் வீட்டுக்கு வராதது பற்றி குற்றம்சாட்டி பேசுகின்றனர்.

Samayam Tamil 13 Apr 2021, 11:15 pm
கார்த்திக் பெயரில் வரும் கடிதத்தை பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
Samayam Tamil sundari serial april 13 episode sundaris mom angry over karthik not returning home
Sundari Serial: சுந்தரியை உங்க வீட்டு வேலைக்காரியா அனுப்பல.. குறை சொல்லும் சுந்தரி குடும்பத்தினர்



துணி கூட இன்னும் கலக்கவில்லையா..

சுந்தரியின் அம்மா அவரது துணியை எடுத்து அலமாரியில் வைக்கலாம் என செல்கிறார். ஆனால் அங்கு பார்த்தால் சுந்தரியின் துணி எதுவும் இல்லை. 'உங்கள் துணி கூட இன்னும் கலக்கவில்லையா. துணி மட்டும் தானா இல்லை எதுவுமே கலக்கவில்லையா?' என கேட்கிறார் அம்மா.

அந்த நேரத்தில் கார்த்திக் பெயருக்கு ஒரு போஸ்ட் வருகிறது.

கார்த்திக் லோன் வாங்கி இருக்கானா?

வந்த தபாலில் என இருக்கிறது என திறந்து படிக்கும்படி கூறுகிறார் மாமா. அதை படித்த சுந்தரி, 'அவர் எதோ லோனே வாங்கி இருக்காராம். அது பத்தின லெட்டர் இது' என சொல்கிறார்.

அதை கேட்டு சுந்தரியின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் ஷாக் ஆகின்றனர். காசு வேண்டும் என்றால் என்னிடம் கேட்டு இருக்கலாமே. அக்கவுண்டில் இருக்கும் பணம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் இவன் எதற்கு லோன் எடுக்கிறான் என கேட்கிறார்.

போன் செய்யாமலேயே சமாளிக்கும் சுந்தரி

அதன் பின் அவனுக்கு போன் செய்து நான் கேட்கிறேன் என கூறி போனை எடுக்கிறார் மாமா. 'நீங்க கேட்கவேண்டாம் நான் கேட்கிறேன் என சொல்லி போனை வாங்குகிறார் சுந்தரி.

போன் செய்யாமலேயே கணவரிடம் பேசுவது போல நடிக்கிறார். அவர் பேசுவதை பார்த்து மற்றவர்கள் ஆச்சர்யம் அடைகின்றனர். ஆனால் இறுதியில் மாட்டிக்கொள்கிறார் சுந்தரி. கணவரை காப்பாற்ற இப்படியெல்லாம் செய்கிறார் என அதற்கும் அவரை பெருமையாக பேசுகிறார் பாட்டி.

திட்டும் அம்மா

ஆனால் அம்மா சுந்தரியை திட்டுகிறார். புருஷன் கிட்ட பேச பயந்துக்கிட்டு பேசுறா மாதிரி நடிக்கிறா. அவங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இருப்பது போல கூட தெரியலையே. எல்லாரும் கல்யாணம் ஆனா ஹனிமூன் போறாங்க. ஆனா இங்க விட்டுட்டு போன பொண்டாட்டிய இத்தனை நாளா பார்க்க வரல. நீங்களும் எதுவும் செய்ற மாதிரி தெரியல' என கேட்கிறார்.

அதன் பிறகு பாட்டி திட்டி அவரை உள்ளே அனுப்புகிறார். (Pic Credits: Sun Nxt)

சுந்தரியை வேலைக்காரியா அனுப்பல

சுந்தரியின் மாமா வீட்டுக்கு வருகிறார். அவரிடம் மாமியார் சுந்தரி பற்றி பெருமையாக பேசுகிறார். வீட்டில் அனைத்து வேலையையும் அவர் தான் செய்கிறார் என சொல்கிறார்.

'ஆனால் சுந்தரியை நான் வேலைக்காரியாக அனுப்பவில்லை, உங்கள் மகனுக்கு வீட்டுக்காரியாக தான் அனுப்பினேன். போனவர் அங்கேயே தங்கிட்டாரு. உங்களுக்கு சொல்லி தான் புரியவைக்கணுமா' என கேட்கிறார் அவர்.

இதனுடன் இன்றைய எபிசோடு நிறைவுபெற்றது.

அடுத்த செய்தி