ஆப்நகரம்

நாங்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறோம் ஆனால் அது எங்களுக்கு கிடையாது! - செந்தில் ராஜலட்சுமி

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த செந்தில்-ராஜலட்சுமி தாங்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறோம் ஆனால் அது எங்களுக்கு மட்டும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 24 May 2019, 7:24 pm
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த செந்தில்-ராஜலட்சுமி தாங்கள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறோம் ஆனால் அது எங்களுக்கு மட்டும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil Senthil Ganesh Rajalakshmi


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தைனையோ பாடகர்கள் வளர்ந்து வந்துள்ளனர். தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பெரிய இடத்தை பிடித்துள்ள செந்தில்-ராஜலட்சுமி தம்பதி தற்போது பிஸியாக இருக்கின்றனர்.

ஒரு லட்சம் சம்பளம்?
செந்தில்-ராஜலட்சுமி தம்பதியிடம் நீங்கள் ஒரு கச்சேரிக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் கேட்பதாக கூறுகின்றனரே ஏன் இவ்வளவு தொகை என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்கள், “கச்சேரிக்காக வாங்கும் சம்பளம் எங்களுக்கு மட்டும் இல்லை. எங்களுடன் பாடும் கலைஞர்கள், இசை கலைஞர்கள் என குழுவில் உள்ளவர்களுக்கும் சேர்த்து தான் அவ்வளவு பணம்.” என கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி